பொது செய்தி

இந்தியா

நான் பரமசிவன்: நித்தியானந்தா பேச்சு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (74)
Advertisement
Nithyananda,kailasa,Video, God, நித்தியானந்தா, வீடியோ, பரமசிவன்

புதுடில்லி: பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாகக் கூறப்படும், சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, 'நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது' என, கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, 'கைலாஷ்' என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது.





'புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை' என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, 'வீடியோ'வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று (டிச.,09) வெளியிட்ட 'வீடியோ'வில், தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசியதாவது:

இந்த உலகம் எனக்கு எதிராக உள்ளது. ஆனால், என் மீது நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை மதித்து, உங்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் தான் ஹிந்துக் கடவுள் பரமசிவன். இந்த உண்மையை நான் சொன்னதற்காக என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் வழக்கு தொடர முடியாது. உங்களுக்கெல்லாம் மரணமே கிடையாது என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
12-டிச-201910:54:27 IST Report Abuse
Kumar periyaar நான் பரமசிவன் என்று அன்றொரு காலத்தில் யாரோ சொல்லி இருப்பர் அன்று யாரும் கேட்காததால் அதனால் அவர் கடவுள் ஆனார் இன்று இவர் சொல்கிறார் அனால் மக்கள் கேட்கிறார்கள் அதான் வித்தியாசம்
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
11-டிச-201912:56:57 IST Report Abuse
Kumar periyaar நித்தி வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201910:51:04 IST Report Abuse
Yaro Oruvan புல் பார்ம்ல் இருக்கான் நம்ம மாப்ள.. சூணா பானா ஒன்னய அடிச்சிச்சிக்கிற ஆள் இல்ல.. அப்டியே மைண்டைன் செய். இவன் உண்மையிலேயே ______ஆ? இல்லன்னா ________ மாதிரி பேசி நம்மள எல்லாம் _______ ஆக்குறானா.. அவனவா நீ? சொல்லவே இல்ல. ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதுடா நித்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X