பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (79)
Advertisement
#CitizenshipAmendmentBill2019,Lok_Sabha,passes,Citizenship_Amendment_Bill,லோக்சபா,குடியுரிமை_சட்டதிருத்த_மசோதா,நிறைவேறியது,நிறைவேற்றம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 9 மணி நேர நீண்ட விவாதத்துக்குப்பின், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இந்த மசோதா நாளை(டிச.,11) ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று(டிச.,9) மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபாவில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஓவைசி, மசோதாவின் நகலை கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. மசோதாவுக்கு அதிமுக., முழு ஆதரவு தெரிவித்தது.

மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


பிரதமர் மோடி நன்றி:


குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இம்மசோதா மீது விவாதத்தின் போது நன்றாக விளக்கம் அளித்ததாகவும் அமித் ஷாவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


அவரது டுவிட்டர் பதிவு:


நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. மசோதாவின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கிய, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என் பாராட்டுக்கள். விவாதத்தின்போது எம்.பி.,க்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201914:54:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் என்னதான்யா நடக்குது இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் 200 MP கள் வைத்திருந்தும் காஷ்மீர் மசோதாவில் 67 பேர் தான் எதிர்த்து ஓட்டளித்தார்கள் , இப்போது 80 பேர் தான் எதிர்த்து ஓட்டளித்திருக்கிறார்கள் . இப்படியே போனால் எதிர்க்கட்சிகளுக்கு என்னதான்யா மதிப்பு.
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
10-டிச-201912:08:19 IST Report Abuse
HSR இந்தியா வெளிநாட்டு சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பான நாடு. மொத்தமாக சொல்லப்போனால் பெரும்பான்மை மக்களைத்தவிர ஏனைய எல்லோருக்கும் பாதுகாப்பான நாடு இந்தியா..
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-டிச-201911:57:09 IST Report Abuse
தாண்டவக்கோன் Muslim சகோதரங்க இந்திய நாட்டோட விடுதலைக்கி போராடிருக்காங்க, RSS - BJP கூட்டம் என்னெத்த செஞ்ஜானுங்களாம் 😖😖😖🤔🤔🤔 ......
Rate this:
Share this comment
HSR - MUMBAI,இந்தியா
10-டிச-201912:19:33 IST Report Abuse
HSRஅவ்வளவு லாஸ் உனக்கு நோட் மாற்றம் அறிவிப்பில்.. ஏண் பயந்துபோய் எல்லாத்தையும் ஏறிச்சிட்டியா?...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
10-டிச-201912:32:25 IST Report Abuse
வல்வில் ஓரி அப்டியே அமித் கிட்ட போயி கேளேன்...ஹா ஹா......
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
10-டிச-201913:47:20 IST Report Abuse
வல்வில் ஓரி ... உறிஞ்சி தொங்கிரும்.....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
10-டிச-201914:24:02 IST Report Abuse
Darmavanஇவன் முஸ்லீம் சகோதரன் எவன் போராடி சிறைக்கு சென்றவன் எதனை பேர் என்று கணக்கு கொடு ...சரித்திரத்தில் அவர்களெல்லாம் காணாமல் போனது ஏன்.பொய் சொல்ல வெட்கமாயில்லையா பச்சோந்தி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X