சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 800 கோடி சுருட்டிய யு.டி.எஸ்., நிறுவனம்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோவை: கோவை பீளமேட்டில் யு.டி.எஸ். எனும் 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்' நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனத்தில்1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரப்படுத்தினர். 16 இடங்களில் கிளைகள் துவக்கினர். சில மாதங்கள் 10 முதல் 20 சதவீதம் வரை வட்டி கொடுத்த நிறுவனம் பின் மோசடி செய்தது.போலீஸ் விசாரணையில் 70 ஆயிரம் பேரிடம் 800 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது.

இந்நிலையில் யு.டி.எஸ். நிறுவனத்தினர்டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக தாமாக முன் வந்து சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.விசாரித்த ஐகோர்ட் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க ஆகஸ்டில் உத்தரவிட்டது.இந்த கமிட்டிக்காக கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து டிபாசிட்தாரர்கள் நேற்று வந்திருந்தனர். டிபாசிட் தொகை அதற்கான சான்று ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்கள் கொடுத்தனர். விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு நீதிபதி தலைமையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பணம் 'செட்டில்மென்ட்' செய்யப்பட உள்ளது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
10-டிச-201914:26:48 IST Report Abuse
thulakol தமிழக மக்களின் மூலையெய் மழுங்கடித்து விட்டார்கள் யாரையும் சுலபமாக நம்பிவிடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Panorama - Chennai ,இந்தியா
10-டிச-201913:49:44 IST Report Abuse
Panorama மக்களிடம் பேராசை பெருகிவிட்டது. இதுபோல் எத்தனை சிட் பண்ட் மோசடிகளை பார்த்துவிட்டோம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதுபோல் பிரைவேட் கம்பெனிகளில் டெபாசிட் செய்து முதலுக்கே மோசம் என நிலை ஏற்படும்போது தான் தெரிகிறது. இதுபோன்ற அனுபவத்திற்கு பிறகும் மக்கள் திருந்தவில்லையென்றால் அது அவர்களின் குறையே.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
10-டிச-201909:54:55 IST Report Abuse
mohan கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நடக்கிறது.... மக்கள் என் தெரிந்து கொள்வதில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X