பாக்.,குக்கு எதிரான போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Pakistan,Kashmiris,war_veterans,protest,against,Islamabad,sponsored,terrorism,பாகிஸ்தான்,அமெரிக்கர்கள்,பங்கேற்பு

வாஷிங்டன் : பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,குக்கு எதிராக, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில், அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும். காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
10-டிச-201914:12:44 IST Report Abuse
thulakol இந்த உண்மை புரிய அமெரிக்க மக்களுக்கு இத்தனை வருடங்கள் தேவை பட்டது
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
10-டிச-201911:33:50 IST Report Abuse
மூல பத்திரம் நாம் பயப்பட வேண்டியது சீனாவுக்கு பாகிஸ்தானுக்கோ அல்ல அவர்களை சமாளிக்கும் திறமை நம் ராணுவத்திற்கும் அரசியல் தலைமைக்கும் உள்ளது. நாம் பயப்பட வேண்டியது இருந்து விஷயங்களே 1 ) Pseudo Jurnolism 2 ) போலி மதசார்பின்மை வாதிகள் மற்றும் vote bank அரசியலுக்காக அவர்கள் செய்யும் நியாயமற்ற போராட்டங்கள்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-டிச-201904:22:27 IST Report Abuse
 nicolethomson அதே பாகிஸ்தானிகள் இன்று கம்யூனிஸ்ட் சீனாவுடன் கைகோர்த்துள்ளனர் , இந்தியாவின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது , ஸ்டெர்லைட் போல எத்துணை நிறுவனங்களை மூட போகின்றனரோ
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
10-டிச-201905:59:29 IST Report Abuse
Nathanநிக்கோலு ,ஆந்திராவில் அக்கு பட்சி, அக்கு பட்சி என, அனாவசியமாய் பயந்து அபசகுனம் சொல்லுபவர்களை கூறுவார்கள் . சைனா உம் விருப்பம் போல் ஒரு ஆணியும் புடுங்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X