யோகி போஸ்டரில் மை: காங்., அமைப்பினர் கைது

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Congress,காங்கிரஸ், யோகி, போஸ்டர், மை, கைது

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத், 'போஸ்டர்' மீது கறுப்பு மை தெளித்ததாக, காங்., மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆக்ரா நகரில் உள்ள மாநில மின்துறை அலுவலகத்திற்கு வெளியில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில், சிலர் கறுப்பு மையை தெளித்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், காங்., மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து, ஆக்ரா நகர காங்., தலைவர் மனோஜ் தீட்ஷித் கூறுகையில், ''காங்., மாணவர் அமைப்பினரை, பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். மை தெளித்தவர்கள் யார் என்பதை விசாரித்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
10-டிச-201918:50:53 IST Report Abuse
Mayavan Mayavan மை காங்கிரஸ் மை காங்கிரஸ்னு கோஷம் போடறணுவுலே அதனா இது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-டிச-201917:18:42 IST Report Abuse
தமிழ்வேல் எவனையும் காணோமே... எல்லாம் தீவுக்குப் போயிட்டானுவோளா..
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
10-டிச-201916:23:43 IST Report Abuse
ஜெயந்தன் உபி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ..இப்படி ஒரு முதல்வரை பெறுவதற்கு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X