அரசியல் செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி வெங்காயம் கிடைக்க அரசு நடவடிக்கை : ஸ்டாலின்

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (30)
Advertisement
stalin,mkstalin,dmk,onion,திமுக,ஸ்டாலின்,வெங்காயம்

சென்னை : 'வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமலும், நியாயமான விலையிலும் கிடைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:வெங்காயத்தை உரிக்கும் போது தான், முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது, வெங்காய விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் வேகமாக விலையேறும்; அதிக விலைக்கு விற்கும் பொருட்களில் ஒன்றாகி விட்டது.நாடு முழுவதும், வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில், விலை கட்டுக்குள் உள்ளது. தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்காதது ஏன்; பூண்டு விலையும், 40 சதவீதம் அதிகரித்து விட்டதாக, வணிகர்கள் சொல்கின்றனர்.

உணவு பொருட்கள் தட்டுப்பாடு இன்றியும், நியாயமான விலையிலும் கிடைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகுதுாரம் அந்நியப்பட்டு போய் விடுவீர்கள் என, எச்சரிப்பது என் கடமை.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.சோனியாவுக்கு வாழ்த்துதன் டுவிட்டர் பதிவில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாட்டின் மதச்சார்பின்மையையும், கூட்டாட்சி தத்துவத்தையும் காப்பதில், அவர் தலைமையிலான காங்கிரஸ் முக்கிய, குறிப்பிடத்தக்க பங்களிப்பை தந்துள்ளது. அவரின் பொதுவாழ்வு பயணம், மேலும், பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன் நேபாளத்தில் நடந்த, 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில், வாலிபால் இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வென்று சாதித்துள்ளது.

இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித், தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் பெருமை. அவருக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-டிச-201916:47:55 IST Report Abuse
Endrum Indian நீ வெங்காயக்கட்சி ஆள் தானே அதான் இப்படி பேசுகின்றாய்???
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
10-டிச-201915:44:46 IST Report Abuse
dandy இலவச சாராயம் கட்டுமரம் கொடுத்த மாதிரி ... இவர் இலவச வெங்காயம் அறிவிப்பு செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
10-டிச-201914:42:27 IST Report Abuse
sankar கிஷோர் எழுதி கொடுத்தாலும் படிக்கிறது நம்ம சுடலைதானே ??? அப்படின்னு துரை நக்கல் அடிக்கிறாராம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X