அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடும் பின்விளைவுகள்: சிதம்பரம் எச்சரிக்கை

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
chidambaram,Congress,p_chidambaram,குடியுரிமை,மசோதா

புதுக்கோட்டை : ''குடியுரிமை திருத்த சட்டத்தால், பா.ஜ., கடும் பின் விளைவுகளை சந்திக்கும்,'' என, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று, அவர் அளித்த பேட்டி: குடியுரிமை மசோதா என்பது, அரசியல் சாசனத்திற்கு முரணானது. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக, முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். எல்லா நாடுகளிலும், அகதிகள் சட்டம் இருக்கிறது.

அகதிகள் சட்டத்தை கொண்டு வருவதற்கு பதில், சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி, ஒரு மதத்தினருக்கும், மற்றொரு மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில், குடியுரிமை சட்டத்தை இந்த அரசு கொண்டு வருகிறது. எதிர்ப்புகளை ஒதுக்கி, இந்த சட்டத்தை, பா.ஜ., அரசு நிறைவேற்றினால், கடும் பின் விளைவுகளை சந்திக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
11-டிச-201911:01:35 IST Report Abuse
JSS பின் விளைவு என்பது ஆருக்கு இருக்கும் மூல வியாதியாக இருக்கும்போல. பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து துரதியடிக்கப்பட்டபோது இவர் வாயில் சாணியை அடைத்து வைத்திருந்தாரா . இவரை ஜாமீனில் வெளியே விட்டது மாபெரும் தவறு.ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்.He is a criminal to the core .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-201923:38:50 IST Report Abuse
RajanRajan வந்துடானையா, அன்னிய துஷ்ட சக்திகளுக்கு சொறிஞ்சு வுடுறதுக்குன்னே அலையுற ஜென்மம்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
10-டிச-201921:31:48 IST Report Abuse
 N.Purushothaman ரஜஸ் ...இன்னமும் உங்களுக்கு புரியலையா ...இரு நாடுகளுக்கிடையில் உருவாக்கப்படுவது ஒப்பந்தம் ...உள்நாட்டில் உருவாக்கப்பட்டது சட்டம் ...அகதிகளுக்கான சட்டம் உள்ளது ....அதாவது வெளி நாட்டில் இருந்து போரினாலோ அல்லது அசாதாரண சூழலாலோ இன்னொரு நாட்டிற்கு வரும் போது அப்படி வருபவர்களுக்கென்று சட்டம் உள்ளது ...இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்பது அவ்வாறு வந்த அகதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்குள் திருப்பு அனுப்பவது உள்ளிட்ட பல அம்சங்களை இரு தரப்பும் ஒப்பு கொண்டு ஏற்படுத்துவது ஒப்பந்தம் ...இந்தியா -இலங்கைக்கு இடையில் இவ்வாறு ஒரு முறை அல்ல இரண்டு முறை ஒப்பந்தம் ஆகி உள்ளது ...அண்டை இசுமாலிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினரையும் இலங்கை தமிழர்களையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது என்பது தான் வாதம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X