சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்

கோவை : யு.டி.எஸ்., நிறுவனம், 800 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிட்டியில், பணம் திரும்ப பெற, டெபாசிட்தாரர்கள் திரண்டனர்.

கோவை, பீளமேட்டில், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரபடுத்தினர். மக்களிடமிருந்து பெற்ற பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பல மடங்கு பணம் திருப்பி தரப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி, சேலம், நெல்லை, துாத்துக்குடி உட்பட 16 இடங்களில் கிளைகள் துவக்கினர். அனைத்து கிளைகளிலும், ஆயிரகணக்கானோர் டெபாசிட் செய்தனர். டெபாசிட்தாரர்களுக்கு சில மாதங்கள், 10 முதல் 20 சதவிகிதம் வரை வட்டி கொடுத்த நிறுவனம், பின் வட்டி தராமல் டெபாசிட் தொகையினை திருப்பி தராமலும் மோசடி செய்தனர்.கோவை பொருளாதார குற்றப்பிரிவு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் சுமார் 70,000 பேரிடம், 800 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

இந்நிறுவன நிறுவன உரிமையாளர் ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீது , கடந்த மே, யில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், யு.டி.எஸ்., நிறுவனத்தினர், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக(செட்டில்மென்ட்), தாமாக முன் வந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக , ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க, கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.

இந்த கமிட்டி, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு, யு.டி.எஸ்., நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டது. இதற்காக, கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள் விண்ணப்பிக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் கடிதம் அனுப்பபட்டுள் ளது. இதையடுத்து, 300 க்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்கள் நேற்று வந்திருந்தனர். பின், அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒவ்வொருவரும் டெபாசிட் செய்த தொகை, அதற்கான சான்று, ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து கொடுத்தனர். விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு, நீதிபதி தலைமையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பணம் 'செட்டில்மென்ட்' செய்யப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
11-டிச-201907:24:47 IST Report Abuse
Watcha Mohideen இந்தியர்களின் கொள்கையே எப்படியாகிலும் பணம் பார்த்துடனும் , எத்தனையோ ஏமாற்று ஸ்கீம் வந்தாலும் நான் முந்தினு பணத்தை கொண்டு கொடுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
11-டிச-201905:58:00 IST Report Abuse
Nathan இன்னும் இந்த மாதிரி கவர்ச்சி குவிக் மணிக்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் பிக்காரிக் கூட்டம் இருக்கே,
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201915:23:30 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை.....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-டிச-201910:38:15 IST Report Abuse
vbs manian பணத்தாசை பிடித்த மக்கள் எப்போதும் திருந்த போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X