அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரண்டு கட்ட தேர்தல் எங்கெங்கே? அறிவிப்பு வெளியிட்டது ஆணையம்!

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019
Advertisement
TN,TamilNadu,election,தேர்தல்,அறிவிப்பு,ஆணையம்!

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக எங்கெங்கு நடக்கிறது என்ற பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம், அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, 27 மாவட்டங்களில் மட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை செய்தபின், தேர்தல் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து, 27 மாவட்டங்களில், வரும், 27, 30ம் தேதிகளில், இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம், இம்மாதம், 7ம் தேதி வெளியிட்டது.

ஆணைய அறிவிப்பின்படி, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. ஆனால், இரண்டு கட்டங்களாக எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற, பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையற்ற நடவடிக்கைகளால், சர்ச்சை எழுந்தது.இது குறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, இரண்டு கட்ட தேர்தல் குறித்த விவரம், மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு அரசிதழிலும், முறைப்படி வெளியானது. இதன்படி, சென்னையை ஒட்டியுள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்துார், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, வரும், 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வரும், 30ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதேபோல, அனைத்து மாவட்டங்களுக்கான முதற்கட்ட தேர்தல், இரண்டாம் கட்ட தேர்தல் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X