எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு? நகராட்சி நிர்வாகத்துறை ஆலோசனை

Added : டிச 10, 2019
Advertisement
TN,TamilNadu,election,அபராதம்,மேல்முறையீடு,அதிகாரிகள்,நகராட்சி,நிர்வாகத்துறை,ஆலோசனை

விதிமீறல் கட்டடங்கள் வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், விதிகளை மீறி கட்டப்பட்ட, 138 கட்டடங்கள் குறித்த வழக்கில், 'நோட்டீஸ்' அனுப்பி, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சில மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கு, ஒரு வாரத்திற்கு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி - சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்; தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரும், மாநகராட்சி கமிஷனரும், வரும், 17ல் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த உத்தரவால், சி.எம்.டி.ஏ., --- மாநகராட்சி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை உயரதிகாரிகள், சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், தலைமை செயலகத்தில் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில், அபராதம் செலுத்துவதை விட, மறுஆய்வு கோருவது அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மேல் முறையீடு செய்வதிலேயே, அதிகாரிகள் குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'நீதிமன்றம் அபராதம் விதித்த விவகாரத்தில், அரசின் அனுமதி பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X