பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணாமலேயே வருவார் நம்ம அண்ணாமலை!

Added : டிச 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
திருவண்ணாமலை, திருக்கார்த்திகை, மகா தீபம், மலை, முக்தி, அண்ணாமலையார், மோட்சம், பரணி, மகுட மரம்

வீட்டுக்கு வரும் சிவன் : உயிரினங்களை படைக்கும் பிரம்மா, காக்கும் மகாவிஷ்ணுவுக்கு இடையே 'நானே பெரியவன்' என்ற போட்டி எழுந்தது. அதை அடக்க எண்ணிய சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். இருவரும் அடி, முடி தேடும்படி அசரீரி கேட்டது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் வானுலகம் சென்றார்.சுவாமியின் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்றார் விஷ்ணு. அவர்களால் நெருங்க முடியாமல் போகவே, சிவனே முழுமுதற்கடவுள் என உணர்ந்தனர். அந்த நாளையே திருக்கார்த்திகையாக கொண்டாடுகிறோம். இந்நாளில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றி சிவனை ஒளிப்பிழம்பாக வழிபடுகிறோம்.


தீபம் போல 'ஜம் ஜம்'கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விளக்கேற்றுவர். மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தின் ஜோதி, தாங்கள் ஏற்றிய விளக்குகளிலும் படிவதாக நம்புகின்றனர். அந்த விளக்குகளை வீடுகளுக்கு எடுத்து வருவதால் வாழ்க்கை கார்த்திகை தீபம் போல பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை.


நெய் விளக்கு நிறையா இருக்குதிருக்கார்த்திகையில் மண் அகலில் நெய், நல்லெண்ணெய் விட்டும், வாசலில் கோலமிட்டு ஐந்து முக பெரிய விளக்கிலும் ஒளி ஏற்றுவர். பசுவின் உடம்பில் எல்லா தெய்வங்களும், தேவர்களும் வாசம் செய்கின்றனர். அதில் அம்பிகை குடியிருக்கிறாள். விளக்கில் நெய் விட்டு தீபமேற்றியதும் அது சிவமாகிய ஜோதியுடன் கலந்து 'சிவ சக்தி' சொரூபமாகி விடுகிறது.


முழு நிலா வாழ்க்கைதீபாவளி ஐப்பசி அமாவாசையிலும், திருக்கார்த்திகை கார்த்திகை பவுர்ணமியிலும் கொண்டாடப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறப்பதை தீபாவளியும், முழு நிலவு போல நம் வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்பதை தீபத்திருவிழாவும் உணர்த்துகின்றன.


'ஹர ஹர' பேசு பாவங்கள் துாசுகொடுத்த கடன் திரும்ப கிடைக்கவில்லை என்றால் 'உன் பணம் அரோஹரா தான்' எனச் சொல்வர். 'ஹர ஓ ஹர' என்ற சொல் தமிழில் 'அரோஹரா' எனத் திரிந்தது. சிவபெருமானின் திருநாமங்களில் 'ஹர' என்ற சொல் உயர்வானது. 'அரஹர' என்றால் 'பாவங்கள் கரிந்து விட்டது' என பொருள். 'ஹர ஹர' என உச்சரிக்க பாவம் பறந்தோடும். அதனால்தான் அண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும் போது 'அரோஹரா' என எங்கும் ஒலிக்கும்.


மாதங்களில் '1'தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை. அந்தக் காலத்தில் கார்த்திகையை முதல் மாதமாகக் கொண்டு புத்தாண்டை துவக்கினர். ரிக் வேதத்திலும் நட்சத்திரங்களை கணக்கிடும் போது கார்த்திகை முதல் இடத்தில் உள்ளது. சிவனுக்கும், முருகனுக்கும் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்பு இருப்பதால் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.


அம்மாடியோவ்... அண்ணாமலை* திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி (24 ஏக்கர்).

* 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயர் தற்போது வழங்கப்படுகிறது.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில் அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.

* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன.

* ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம். மழை போல வள்ளல் தன்மை கொண்டதால் ஓயாமாரி மடம் என்றும்
சொல்வர்.

* செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் என்றவர் சேஷாத்ரி சுவாமிகள். லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.

* திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம். மகிழ மரம், வடவால விருட்சம் என்றும் சொல்வதுண்டு.

* மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த சுவாமியும் இந்த வழியாக வருவதில்லை.


சுத்தி சுத்தி சுனை மலையானை நினை* அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறைச் சுனை, கங்கை தீர்த்தம், சிம்ம தீர்த்தம் உட்பட 360 தீர்த்தங்கள் மலையைச் சுற்றி உள்ளன.

* மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை 'எலால்' என்பர். சிக்னல் போல இதை காட்டியதும் மலைதீபம் ஏற்றுவர். அப்போது 'அண்ணாமலைக்கு அரோஹரா' என்னும் சப்தம் எதிரொலிக்கும்.

* ரமண ஆசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி தீர இங்கு சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

* கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை 3ம் தேதியும் அண்ணாமலையார் மலை சுற்றி
வருவார்.

* மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சிவபக்தராக மாறினார். தமிழில் பேசுவார்.

* திருவண்ணாமலைக்கு தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என பெயர்கள் உண்டு. இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நுாலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

* திருவண்ணாமலை ஆண்டார், மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்களால் அண்ணாமலையார் குறிக்கப்படுகிறார். திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.

* கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாள் துர்க்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ravi - Bengaluru,இந்தியா
10-டிச-201915:22:42 IST Report Abuse
K.Ravi ஓம் நமசிவாயா, ஸ்ரீ அண்ணாமலையாருக்கு அரோஹரா ஸ்ரீ உண்ணாமுலை அம்மனுக்கு அரோஹரா. திருசிற்றம்பலம், சிவ சிதம்பரம், ஓம் நமசிவாயா
Rate this:
Share this comment
Cancel
ALL INDIAN BJP - singapore,சிங்கப்பூர்
10-டிச-201910:49:50 IST Report Abuse
ALL INDIAN BJP அண்ணாமலைக்கு அரோகரா, ஓம் நமசிவாய ஓம் தினமலர் இணையத்தளத்தில் மகா தீபம் நேரடி ஒளிபரப்பு செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
10-டிச-201908:57:47 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) ஹர ஹர மகாதேவாதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X