பொது செய்தி

இந்தியா

'என்கவுன்டர்' சிறப்பு விசாரணை குழு

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஐதராபாத்: கால்நடை பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நால்வர், 'என்கவுன்டரில்' கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை, தெலுங்கானா அரசு, நியமித்துள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த, 25 வயது, கால்நடை பெண் மருத்துவர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெண் மருத்துவரை, பலாத்காரம் செய்து கொன்ற நான்கு லாரி ஓட்டுனர்களை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.சம்பவம் நடந்த இடத்திற்கு, குற்றவாளிகளை விசாரணைக்காக அழைத்து சென்றபோது, அவர்கள் தப்பிக்க முயன்றதை அடுத்து, நான்கு பேரையும் சுட்டுக் கொன்றதாக, போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில், குற்றவாளிகள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம்.பாகவத் தலைமையில், எட்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, விசாரணையை விரைவில் முடித்து, அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'என்கவுன்டர்' விவகாரத்தில், சிறப்பு விசாரணைக் குழு கோரி, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு பொது நல மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன.இதில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-201910:50:56 IST Report Abuse
RajanRajan ஒரு சீரோ லாஸ் வக்கீல் கிங்க்பின் க்கு எடை குறைந்து விட்டது ஹைட்ரபாத் டாக்டரின் மருத்துவம் தேவை என ஜாமீன் கேட்டான் உண்மையை மறைத்து துட்டுக்காக. ஆனால் கிங்க்பின் என்னவானான் பானு செஞ்சொற்று கடனால் வெளியே வந்து என ஆவி முதுகு வலி எல்லாமே திஹார் மருத்துவ கஞ்சி காய்ச்சினத்திலே சரியாகி நான் பயில்வானாகிட்டேன் என்று முழங்குகிறான். இப்படி தான் ஜாமீன் என்பதே ஒரு சாக்குபோக்கு காட்டுற நீதி துறை ஓட்டை என்பது எல்லாவனுக்கும் தெரிஞ்சு போச்சு நீதிபதிக்கும் சேர்ந்து தான். ஜாமீன் வாங்கி வர்றவன் என்ன பண்ணுறான் சாட்சிகளை விட்டு கொளுத்தி அழிச்சு டபுள் ஜி வேகத்திலே நிரபராதி என்று பட்டாசு வெடிக்கிறான். இப்படி நீதிக்கு தீர்ப்புகளை போக்கு காட்டுவதே இந்த கூறுகெட்ட துட்டுக்கு அலையுற வக்கீல்கள் என்பது உலகறிந்த உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
10-டிச-201907:34:47 IST Report Abuse
Krishna Eye Wash & Biased Investigations by Police for Cover-ups of Themselves & their Masters-Rulers (their Ilegal-Coldblooded Murders) Let there be Quick & Maxm Punishment (incl. Death) to Real Accused (Instead of Scape-Goats propped-up to Cover-Up natural Failures of Police Investigations) through Fast-Track But Neutral-Unbiased Investigation & Courts (possible within 01-06months). Even Vested & Conspiratorial Media (Mal-Propaganda by Sensational News Hungry Media), Cheap-Dirty Politicians (for Diverting People From Main Issues), Pro-Ruler & Anti-People Officials (incl. Police etc who also Destroy Evidences), Groups (like Anti-Men & Pro-Women Fanatics Etc) Must also be Fast Punished in Same Trials. Police etc Doing such Cold-Blooded, Unconstitutional Murders to satisfy vested Interests Must be Punished With Same Brutal Midnight Encounter-Murders. Atleast SC Must Act V.Quickly to Control Dangerous Deterioration of Law & Order. Its dangerous to Live in Banana Republic. God save the Country.
Rate this:
Share this comment
mei - Colombo,இலங்கை
10-டிச-201908:16:01 IST Report Abuse
meiபிரியங்கா ன்னு ஒரு பொண்ணை ரேப் பண்ணி எரிச்சு கொன்னாங்களே , அப்போ திருவாளர் எங்கு இருந்தீர்களோ ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X