பொது செய்தி

இந்தியா

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம்: ஐ.நா., ஆய்வறிக்கை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியா, மக்களின் வறுமையை ஒழிப்பதில் சிறப்பாக முன்னேறியிருப்பதாக, ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட, இந்திய பிரதிநிதி, ஷோகோ நோடா பேசியதாவது :நடப்பாண்டில், 189 நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், மனித வள மேம்பாட்டு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியா, 129வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 130வது இடத்தில் இருந்தது. கடந்த, 30 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது.

அதாவது, மக்களின் வறுமை நிலை வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன், மக்களின் சராசரி வாழ்நாள் நீடித்துள்ளது. கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆரோக்கிய பராமரிப்பு வசதி பரவலாக கிடைத்துள்ளது.இந்தியாவில், 2005--16ம் நிதியாண்டுகள் வரை, 27.10 கோடி பேர், வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.'பிரதமரின் அனைவருக்கும் வங்கிச் சேவை', 'ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு' போன்ற பல திட்டங்கள், மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த துணைபுரிகின்றன. இது,'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற பிரதமரின் தாரக மந்திரத்திற்கு வலுசேர்ப்பதாக உள்ளது.இந்தியா, மனித வள மேம்பாட்டு குறியீட்டில், 50 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, நடுத்தர மனித வள மேம்பாட்டு குழுவை விடவும், இதர தெற்காசிய நாடுகளின் சராசரி வளர்ச்சியை விடவும் அதிகம்.





மனித வளத்தை மேம்படுத்துவதில், வேறு, எந்த பிராந்தியத்திலும், இத்தகைய விரைவான வளர்ச்சி காணப்படவில்லை.கடந்த, 1990-2018 வரை, தெற்காசிய நாடுகள். 46 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் வளர்ச்சி, 43 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-டிச-201908:42:28 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த பாஜகவுக்கு அறிவேயில்லை நம் நாட்டில் வறுமை ஒழிந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தானே காங்கிரசும் கம்யூனிஸ்டும் ரோஹிங்கியா வங்கதேச முஸ்லிம்களை இறக்குமதி செய்யக் கேட்கின்றன? அதனால்தானே புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றன ? கொஞ்சமாவது அதனை காது கொடுத்துக் கேட்ககூடாதா?
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
10-டிச-201908:41:44 IST Report Abuse
GMM வறுமையை ஒழிக்க ஏழை குடிமக்கள் திட்டமிட்ட குடும்பம் அமைக்க வேண்டும். அரசு குடும்ப கட்டுபாடு கொண்டு வர வேண்டும். அரசு முழு மது ஒழிப்பு கொள்கை வகுக்க வேண்டும். ஒருவர் வருவாயை தான் முடியாதவருக்கு அரசு பகிர்ந்து கொடுக்கும். வருவாய் ஈட்டாது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-டிச-201907:07:46 IST Report Abuse
blocked user வணிகர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொருளாதார பயங்கரவாதி சிதம்பரத்தின் குடும்பம் வறுமையில் உழலுகிறதாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X