சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., செயலருக்கு ஓராண்டு சிறை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெரம்பலூர் : பெரம்பலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முத்துசாமி(60). இவருக்கும், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., நகர செயலரான ராஜேந்திரன்,50. என்பவருக்கும் இடையே நெருங்கிய பழக்கத்தால் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது.

இந்நிலையில், ராஜேந்திரன் கடந்த ஆண்டு தொழில் ரீதியாக ரூ. 5 லட்சம் பணத்தை முத்துசாமியிடம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டபோது முத்துசாமிக்கு ரூ. 5 லட்சத்துக்கு மூன்று செக்காக வழங்கினார். பின் அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, ராஜேந்திரனின் கணக்கில் இருப்பு தொகை இல்லாததால் திரும்பி வந்துவிட்டது. செக் குறித்து கேட்டபோது அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துசாமி வழக்கு பதிந்தார். இதனால் செக் மோசடி வழக்கில் அ.ம.மு.க., நகர செயலருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-டிச-201913:16:57 IST Report Abuse
இந்தியன் kumar கடன் கொடுப்பதுவும் வாங்குவதும் நல்லதல்ல
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
10-டிச-201906:07:18 IST Report Abuse
Indhuindian கட்சியின் கொள்கையை கடைபிடிக்காதது தான் இவருடைய குற்றம். அவர் ஏன் செக்க்காக கொடுத்தார். அவருடன் ஒரு இருபது ருபாய் நோட்டு இல்லையா. அதை கொடுத்திருந்தால் இப்படி மட்டிப்பாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X