பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவர்! ரூ.1.14 கோடியில், பள்ளி மேம்பாட்டு பணி

Added : டிச 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தவர்! ரூ.1.14 கோடியில், பள்ளி மேம்பாட்டு பணி


முன்னாள் மாணவரின் கல்வி சேவை


மழை நீர் உட்புகும் வகுப்பறை, வெள்ளையடித்து பல ஆண்டுகளாக அப்படியே உள்ள கீறல் விழுந்த சுவர், துருப்பிடித்த ஜன்னல், இருந்தும் இல்லாதது போன்ற கழிப்பிடம் இவையெல்லாமும்தான், பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் அடையாளங்களாக இன்றும் உள்ளன.

ஆனால், திருப்பூர் அருகே கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி அப்படியல்ல, என்பதை நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஒரு காலத்தில், அரசு பள்ளிக்கே உரிய அடையாளத்தோடு விளங்கிய இப்பள்ளி இப்ேபாது, தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் அளவு, 'பளிச்' என்றாகி விட்டது. அடடே... அரசு பள்ளி இப்படி மாறிவிட்டதா? மாற்றியது யார்? என்பது போன்ற 'மில்லியன்' டாலர் கேள்விகளுக்கு விடையாக விளங்குகிறார், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சுப்ரமணியம்.

திருப்பூர் கே.எம். நிட்வேர் நிறுவனமும் ஒன்று. இதன் நிர்வாக இயக்குனர், சுப்ரமணியம். கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர். தான் படித்த அவர், தன்னால் இயன்றதை பள்ளிக்கு செல்ல முடிவெடுத்தார். இதற்காக, ஒரு லட்சமல்ல, இரண்டு லட்சமல்ல, ஒரு கோடி ரூபாய் செலவழித்து, வகுப்பறைகளுக்கு தரைத்தளம், புதிய மேற்கூரை, 58 கழிவறைகள், விருந்தினர் அறை, கலையரங்கம் என அமர்க்களப்படுத்தி விட்டார். இதுதவிர, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பார்க்கிங், பள்ளி வளாகத்தில் புதர்களை அகற்றி, தரைத்தளம், கழிவுநீர் வெளியேற முறையான கட்டமைப்பு, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சாய்வு தளம், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு.

விளையாட்டு உபகரணம் பாதுகாப்பு அறை, வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர். இருங்க... இன்னும் முடியல... அதுமட்டுமா, இன்றைய நவீன காலத்துக்கு, புரஜெக்டர், ஸ்கிரீன்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறையும் கட்டப் பட்டுள்ளது. எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில், வண்ணங்களில் வார்த்தெடுத்த பள்ளி சுவர்கள் பளிச்சிடுகின்றன. இப்படி எல்லா வகையான கட்டமைப்புகளையும் உருவாக்கி, தான் பயின்ற பள்ளிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் சுப்ரமணியம். அரசு பள்ளியை உருமாற்றிய கே.எம்., நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் கூறியதாவது: முன்னாள் மாணவர் என்ற ஒரு நிகழ்ச்சியில், முன்னாள் மாணவன் என்கிற முறையில் விடுத்த அழைப்பை ஏற்று, கொடுவாய் அரசுப்பள்ளிக்கு சென்றேன். பள்ளிக்கு உள்ளே நுழைந்த உடனே, கழிவறையின் துர்நாற்றம்தான் எங்கும் வீசியது.

ஏறத்தாழ, 1,200 மாணவர் படிக்கும் பள்ளியில், போதிய கழிவறை இல்லை; தட்டியால் மறைக்கப்பட்ட கழிவறைகளை மாணவர்கள் பயன்படுத்தினர். மேற்கூரை பெயர்ந்த, தரை தளம் இல்லாத வகுப்பறை; சிதிலமடைந்த, பெயின்ட்கள் உதிர்ந்த சுவர் என, மிக மோசமான நிலையில் இருந்தது. பள்ளியின் நிலையை பார்த்து, மிகவும் வேதனை அடைந்தேன். 50 லட்சம் ரூபாயில், பள்ளியை மறுசீரமைத்து விட முடிவு செய்து களமிறங்கினேன். ஆனால், மதிப்பீடு, அதையும் தாண்டி, ஒரு கோடியே, 14 லட்சம் ரூபாய் என்று முடிந்தது.

இருந்தால், கொடுவாய் பள்ளி புதுப்பொலிவு பெற் றிருப்பது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானம், புதிதாக, 30 வகுப்பறை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தின் 'ஹைடெக்' பள்ளியாக, கொடுவாய் அரசுப் பள்ளியை மாற்றிக்காட்டுவதே என் லட்சியம். இதற்காக, முன்னாள் மாணவர் அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கி உள்ளோம் என்று கூறிய சுப்ரமணியத்தின் அலுவலகம் முழுக்க, தலைவர்களின் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன. அதில், ஒன்றாக, 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்,' என்ற முண்டாசு கவிஞனின் வரிகள் மின்னியது. இவ்வரிகளுக்கும், சுப்ரமணியத்துக்கு சாலப்பொருத்தம் என்று எண்ணியவாறே விடை பெற்றோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201911:36:22 IST Report Abuse
மோகன் திரு. சுப்பிரமணி அவர்கள் பல்லாண்டு வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X