அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐதராபாத் என்கவுன்டரில் தவறு என்ன இருக்கிறது: ஜெகன்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டை அதிர வைத்த இச்சம்பவம் தொடர்பாக, கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.என்வுகன்டரை ஆதரித்து தெலுங்கானா மக்கள் போலீசருக்கு இனிப்பு வழங்கியும் ஆடிப்பாடியும்
"Hats Off": Jagan Reddy Praises KCR On Telangana Accused Killingஐதராபாத் என்கவுன்டர், தவறு என்ன இருக்கிறது: ஜெகன்

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டை அதிர வைத்த இச்சம்பவம் தொடர்பாக, கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


latest tamil news


என்வுகன்டரை ஆதரித்து தெலுங்கானா மக்கள் போலீசருக்கு இனிப்பு வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடினர். இந்த சம்பவம் ஆந்திர மாநில சட்டசபையிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் கொண்டு வரப்படும். அது அவசியமான ஒன்றாகும். அதேபோல பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய நான் எவ்வாறு அதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுவது? இந்த என்கவுன்ட்டர் செய்த தெலுங்கானா போலீஸாருக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள்.அதேசமயம், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் யார் என்பதையும் முதல்வர் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு ஜெகன்மோகன் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-டிச-201909:17:56 IST Report Abuse
Bhaskaran இதில் என்ன போஸ்ட்மார்ட்டம் . தப்புசெஞ்சவனுக்குத்தண்டனை கொடூரமாக இருந்தால்தான் யோசிப்பனுவ
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
10-டிச-201915:34:42 IST Report Abuse
rishi பாதுகாப்பு ஒத்திகை செய்வது போல, பெண் போலீசார் சிவில் ட்ரெஸ்ஸில் ரோந்து வந்து ரோமியோக்களை களை எடுக்கலாம்..
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10-டிச-201914:55:40 IST Report Abuse
Mirthika Sathiamoorthi என்கவுன்டரில் தவறில்லை...ஆனால் அவசரம் இருக்கிறது...அதுதான் ஏன்? மக்கள் நடமாட்டமுள்ள ஒரு இடத்திலிருந்து ஒரு பெண்ணை கடத்தி உயிரோடு இருந்தால் மாட்டிக்குவோம்ன்னு கொன்னு எரிச்ச அந்த தைரியம்....இவர்களுக்கு இது முதல் குற்றமல்லன்னு சொல்லாமல் சொல்லுது...இவர்கள் உயிரோடு இருந்தால் இன்னும் தெளிவிக்க படாத பலகுற்றங்கள் வெளிவர வாய்ப்பு...அதுமட்டுமல்ல இவர்களுடன் வேறுயாராவது தொடர்பில் உள்ளனரா எனும் உண்மையும் வெளிவந்திருக்கும்....சூட்டு கொன்னது அவர்களை மட்டுமல்ல இன்னும் வெளிவரவேண்டிய பல உண்மைகளையும் சேர்த்து கொன்னாச்சு...
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
10-டிச-201918:09:50 IST Report Abuse
VSKஆமாம் . உங்ககிட்டத்தான் வந்து அதையெல்லாம் கொட்டியிருக்காங்க ஏன் , நீங்களே வந்து மறைச்சதையெல்லாம் கண்டுபிடிச்சுக்க கொடுங்க தாயி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X