பொது செய்தி

தமிழ்நாடு

மூத்தோர் தடகளம்: தங்கம் வென்ற மூதாட்டி

Added : டிச 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மூத்தோர் தடகளம்: தங்கம் வென்ற மூதாட்டி

தஞ்சாவூர் : மலேஷியாவில் நடந்த மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி 72. ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை. கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள் உள்ளனர்.திலகவதி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி 2006ல் ஓய்வு பெற்றார். விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாக தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.

மலேஷியாவில் மூத்தோருக்கான 21வது ஆசிய தடகளப் போட்டி டிச. 2 முதல் 7ம் தேதி வரை நடந்தது. இதில் பங்கேற்ற திலகவதி 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும் 80 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.

திலகவதி கூறுகையில் ''படிக்கும் போதே 1965ல் தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளேன். தொடர்ந்து விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததால் பணி ஓய்வு பெற்றும் மூத்தோருக்கான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201910:49:46 IST Report Abuse
ருத்ரா இவரை பார்க்கும் போது முதுமை இயலாமை வயது, என்ற எண்ணம் அறவே நீங்கி விட்டது வாழ்த்துக்கள் அம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X