சும்மா முழிச்சாராம் அவரு... ஏம்மா... 'கிழி'ப்பாரா, இவரு?

Added : டிச 10, 2019
Advertisement
கார்த்திகை ஜோதி என்பதால், சித்ராவும், மித்ராவும் அகல் விளக்கு வாங்க, பூ மார்க்கெட் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, சித்ராவின் மொபைல்போனில், ரஜினி பட பாடல் ஒலித்தது. எடுத்து பேசி விட்டு அனைத்த அவள், ''ஏன்... மித்து. தெலங்கானா என்கவுன்டருக்கு, பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது தெரியுமில்லே,''''ஆமாங்க்கா, தெரியும்,''''அதைப்பத்தி, நம்ம கலெக்டர்,
 சும்மா முழிச்சாராம் அவரு...  ஏம்மா... 'கிழி'ப்பாரா, இவரு?

கார்த்திகை ஜோதி என்பதால், சித்ராவும், மித்ராவும் அகல் விளக்கு வாங்க, பூ மார்க்கெட் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, சித்ராவின் மொபைல்போனில், ரஜினி பட பாடல் ஒலித்தது. எடுத்து பேசி விட்டு அனைத்த அவள், ''ஏன்... மித்து. தெலங்கானா என்கவுன்டருக்கு, பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது தெரியுமில்லே,''''ஆமாங்க்கா, தெரியும்,''''அதைப்பத்தி, நம்ம கலெக்டர், டிவிட்டரில், 'சும்மா... கிழி'ன்னு கமென்ட் போட்டார். அதுக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நிறையபேர் பதில் போட்டாங்க,''''நான் என்ன சொல்றேன்னா, என்கவுன்டர் மேட்டரை வரவேற்ற கலெக்டர், தனக்கு கீழ் வேலை பார்க்கிற ஊழல் அதிகாரிகளையும், 'கிழி.. கிழி'ன்னு, சாட்டையை எடுத்து சுழற்றினாருன்னா, கண்டிப்பா வரவேற்கலாம்,''''இங்க என்னடான்னா... வி.ஏ.ஓ., ஆபீசில் பியூனில் துவங்கி, கலெக்டர் ஆபீஸ் அதிகாரி வரை, 'சும்மா, வாங்கு... வாங்குன்னு' வாங்கி தள்றாங்க. அதையெல்லாம், இவருக்கு தெரியாமலா இருக்கும். அந்த மாதிரி ஆட்களின் நடவடிக்கையை 'கிழிச்சாருன்னா' தாராளமா பாராட்டலாம். என்ன மித்து, செய்வாரா?''''அக்கா... நீங்க சொல்றது 'சென்ட் பர்சென்ட்'கரெக்ட்டுங்க்கா...'' ஆமோதித்த மித்ரா, ''ஏங்க்கா... லீவிலிருந்த கமிஷனர் வந்துட்டாரா?'' என்றாள்.''இருக்கிறாரா.. இல்லையான்னா... தெரியாத அளவுக்கு அவரோட மூவ்மென்ட் இருக்குது. சிட்டிக்குள்ள அவரை பார்க்கவே முடியறதில்லை. எப்ப பார்த்தாலும், ஆபீசே கதின்னு இருக்கிறார்,''''புதுசா... வந்த துணை கமிஷனர் கஞ்சா விக்கிறவன், சீட்டாட்ட கிளப் என, ரவுண்ட் கட்டி அரெஸ்ட் பண்றார். ஆனா, கமிஷனர் எதையும் கண்டுக்கறதில்லை,''''குறிப்பா சொல்லோணும்னா, சிட்டியில் பல ஸ்டேஷன்களில், இன்ஸ்., வெச்சதுதான் சட்டமா இருக்குது. பல ஆண்டுகளாக ஒரேயிடத்தில் வேலை பார்க்கிறவங்களை 'டிரான்ஸ்பர்' செய்யவேயில்லை. போலீஸ் குவார்ட்டர்சில், பல வீடுகள் இன்னும் பூட்டிதான் கிடக்குது,''''சிட்டியில வேலை பார்க்கிறவங்களுக்கு கொடுக்காம, தகுதியற்றவர்களுக்கு வீடு கொடுத்தது, கமிஷனர் கண்டுக்கவேயில்லை மித்து. லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு வேலை கொடுக்கும், நம்ம ஊரில், குற்றங்களும் அதிகரிச்சிட்டே போகுது,''''அதுக்கு கமிஷனர் ஒரு முடிவு கட்டினாருன்னா, சிட்டி உண்மையிலே 'ஸ்மார்ட்' ஆகும். ஆனா, பண்றதில்லையே'' என விளக்கினாள் சித்ரா.''அக்கா.. அவரு மாதிரி, கார்ப்ரேஷன் கமிஷனரும் இருக்கார். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள், பல நுாறு கோடி ரூபாயில், நடக்குது. இதை ஆய்வு பண்ண, டெல்லியிலிருந்து வந்த குழு, கமிஷனரை வறுத்து எடுத்துட்டாங்களாம்,''''ஏன்...இவருக்கு ஒண்ணுமே, தெரியலையாக்கும்?''''ஆமாங்க்கா... வளர்ச்சி பணி நடக்கிற இடத்தில், 'பல கேள்விகளை அதிகாரி குழு கேட்டிருக்கு?' ஆனா, கமிஷனர் பதில் சொல்ல முடியாம, 'திரு...திரு...'ன்னு முழிச்சிருக்கார்,''''அப்புறம்.. என்னாச்சுடி?''''சரி... வாங்க, ஆபீசுக்கு போலாமுன்னு, ஆய்வை பாதியில விட்டுட்டு, போயிட்டாங்க. அங்கே போயும், கமிஷனரை, சகட்டுமேனிக்கு வறுத்துட்டு, 'அடுத்த முறை, கரெக்டா இருக்கோணும்னு,' டோஸ் விட்டுட்டு போனாங்களாம்ங்க்கா,''''ஆமா... மத்திய அரசின் திட்டப்பணி. சும்மா விடுவாங்களா, என்ன?'' என்ற சித்ரா, ரோட்டில், கொட்டப்பட்டிருந்த கற்குவியலை பார்த்து, ''இப்படி பொறுப்பில்லாம, கொட்டி வச்சிருக்காங்க. டிராபிக் போலீசும் கண்டுக்கறதில்லை'' என்றாள்.''ஆமாங்க்கா.. அவங்க எப்ப பார்த்தலும், முட்டுச்சந்தில் நின்னுகிட்டு, 'கலெக்ஷனில்'தான் குறியா இருக்காங்க. இதைப்பத்தி அவங்களுக்கு என்ன அக்கறை?'' மித்ரா ஆதங்கப்பட்டாள்.''மித்து, இந்த கற்கள் பார்த்ததும், ஊத்துக்குளி ஞாபகம் வந்திடுச்சு,''''ஏங்க்கா... அப்படி என்னதான் நடக்குது?''''அங்க நுாத்துக்கும் மேற்பட்ட கல்குவாரி இருக்கு. அதற்கான துறை அதிகாரி ஒருவர், மாமூல் வசூலிப்பதில் ரொம்ப கெட்டியாம். மாசாமாசம், ஒரு லகரத்தை வாங்கிக்கிறாராம். புதுசா வர்றது, இதற்கு முன் இருந்த ஆபீசர் நிறுத்தி வச்ச பேப்பர்ஸ்... இப்படி எதுவா இருந்தாலும், 'கரன்ஸி'யை காட்டினால், கையெழுத்து போட்டு கொடுத்திடறாராம்,''''என்னங்க்கா.. 'கவி'தை மாதிரி பேசறீங்க,'' என்ற மித்து, ''கண்டமான பஸ்களை விற்றது தொடர்பாக, சர்ச்சை வந்திடுச்சு தெரியுங்களா''''தெரியாதே...''''கண்டமான' கவர்மென்ட் பஸ்களை, எந்தவித பெர்மிஷன் இல்லாம விற்றது குறித்து, அதிகாரியை பதில் அளிக்க உத்தரவிட்டு உயர் அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கறாராம்,''''அது வெறும், கண்துடைப்பா கூட இருக்கும்,'' என்ற சித்ரா, ''அமைச்சர்கிட்ட புகார் பண்ணி, ரெண்டு ஆர்.ஐ.,யை, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம், ஏதாவது தெரியுமா?''''ஆமாங்க்கா... பல்லடத்தில், 'புரம்' பிர்கா ஆர்.ஐ., 'ஸ்ட்ரெய்ட் பார்வார்டு'. ஆவணங்கள் கரெக்டா இருந்தாதான், கையெழுத்து போடுவார். ஆளும்கட்சிகாரங்க சிலர் மிரட்டி பார்த்தும் மசியலையாம். அதனால, மினிஸ்டர்கிட்ட சொல்லி, டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க,''''அதான்டி, ஒருத்தர் நேர்மையா இருந்தா இவங்களுக்கு புடிக்காதே,'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.பூமார்க்கெட்டில், விளக்குகளை வாங்கி விட்டு, இருவரும் புறப்பட்டனர். மித்ராவை, அவள் வீட்டில் இறக்கி விட்டதும், ''அக்கா... உள்ளே வாங்க, காபி குடிச்சிட்டு போலாம்,'' என்றாள்.சித்ராவும் வீட்டுக்குள் சென்றதும், மித்ராவின் அம்மா காபி கொடுத்தார்.அதை கையில் வாங்கி குடித்தவாறே, ''சிட்டி'யில், 'நைட் ரவுண்ட்ஸில்' நடக்கற கூத்து கேள்வி பட்டியா?'' கேட்டாள் சித்ரா.''இல்லீங்களே...''''ஒரு அதிகாரிக்கு, 'நைட் ரவுண்ட்ஸ்' பத்தியே தெரியாது போல. அவருக்கு மட்டும் 'நைட் டியூட்டி' போடறதில்லையாம். என்ன சலுகைன்னு தெரியலைன்னு, மத்த அதிகாரிங்க புலம்பறாங்களாம்,''''ஏங்க்கா.. 'ஜன'ங்க மத்தியில் போனாத்தானே யதார்த்தம் தெரியவரும். 'எப்படியும் மேலதிகாரிக்கு ஐஸ் வைச்சிருப்பாரு. அதனாலதான் இப்படி 'ஹாயா' உட்கார்ந்திட்டு இருக்காரோ,'' என்றாள் மித்ரா.''அக்கா... '...மலை' டிவிஷனில் ஒரு அதி காரி பல வருஷமா குப்பை கொட்டிட்டு இருக் கிறாராம்,''மித்ரா அவசரமாக சொன்னாள்.''யாருடி அது?''''பல வருஷங்களாக, '...மலை' ஸ்டேஷனில் இருந்த அதிகாரி ஒரு வழியா, கோவை மாவட்டத்துக்கு மாத்தினாங்க. ஆனா, பத்தே நாளில், மீண்டும் பழைய டிவிஷனுக்கே வந்துட்டாராம். இடம் வேறன்னாலும், இதுக்கு முன்னாடி ஸ்டேஷன் டியூட்டியும் சேர்த்து பார்க்கிறாராம்,''''அவரோட இந்த 'பவருக்கு' நம்ம மாவட்டத்தோட வி.ஐ.பி.,தான் காரணமாம். அவரோட ஆசி இருக்கிற வரைக்கும், இவர், 'பிரகாச'மாகத்தான் இருப்பார்,,'' என்று கூறி சிரித்த மித்ராவிடம், ''ஓ.கே.., மித்து, நான் கெளம்பறேன். நாளைக்கு ஈஸ்வரன் கோவிலில் மீட் பண்ணலாம்,'' என்றவாறே எழுந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X