'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (11)
Advertisement
'மரம், வெட்ட, கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு

இந்த செய்தியை கேட்க


அவுரங்காபாத்: மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவிடத்துக்காக மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், 'மரங்களை வெட்டக் கூடாது' என முதல்வர், உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுஉள்ளதாக, சிவசேனா தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது.






எதிர்ப்பு



தலைநகர் மும்பையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக, ஆரே காலனியில் மரங்களை வெட்ட, முந்தைய பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சியின்போது அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ் முடிவுக்கு, அப்போது கூட்டணியில் இருந்த சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். அவுரங்காபாத் மாவட்டத்தில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அங்குள்ள பூங்காவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாயின. 'சிவசேனா இரட்டை வேடம் போடுகிறது' என, தேவேந்திர பட்னவிஸின் மனைவி,அம்ருதா, விமர்சனம் செய்திருந்தார்.


பிரச்னை



இந்தப் பிரச்னை குறித்து, சிவசேனா மூத்த தலைவரும், அவுரங்காபாத் முன்னாள், எம்.பி.,யுமான சந்திரகாந்த் கைரே கூறியதாவது:பால் தக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே, இயற்கையை மதிக்கத் தெரிந்தவர்கள். பால் தாக்கரே நினைவிடத்துக்காக மரங்களை வெட்டுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நினைவிடத்துக்காக மரங்கள் வெட்டப்படக் கூடாது என, உத்தவ் தாக்கரே வாய்வழி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதனால், மரங்கள் வெட்டப்பட உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
10-டிச-201919:22:11 IST Report Abuse
rajprince தமிழ் நாட்டுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
10-டிச-201918:11:44 IST Report Abuse
jagan எங்க தீய முக கட்சி காரர்கள், ஆந்திர போய் செம்மரம் வெட்டி காசு பார்ப்பார்கள். அதேபோல் சேனையும் பின்பற்றலாம்.
Rate this:
Share this comment
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
10-டிச-201918:05:46 IST Report Abuse
Mayavan Mayavan இப்போ மரத்தை வெட்ட கூடாதுனு சொல்லுவே அப்புறம் முடியே வெட்ட கூடாதுனு சொல்லுவே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X