காங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு கோரிக்கை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (11)
Advertisement
காங்.,- எம்.பி.,க்கள், மன்னிப்பு , மத்திய அரசு கோரிக்கை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பா.ஜ., அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் பேசும்போது, அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட, இரண்டு காங்கிரஸ் எம்.பி.,க்களை, மன்னிப்பு கேட்டுமாறு, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த வெள்ளியன்று லோக்சபாவில் பேசிக் கொண்டு இருந்தபோது, கேரள காங்.,கை சேர்ந்த எம்.பி.,க்கள், டீன் குரியகோஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகியோர், அமைச்சரை தாக்குவதைப் போல வந்தனர்.


'சஸ்பெண்ட்'
இந்த செயலுக்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து, சபாநாயகரிடம், புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, பார்லி மென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, லோக்சபாவில் நேற்று பேசுகையில், ''சபையில், தரக்குறைவான செயலில் ஈடுபட்ட காங்., - எம்.பி.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்யும் நோக்கம், எங்களுக்கு இல்லை. ''எனவே, அவர்கள் இருவரும், சபையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும்,'' என்றார்.''இது அரசவை அல்ல. மக்களின் பிரச்னைகளை விவாதிக்கும் இடம். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்,'' என, லோக்சபா காங்., எதிர்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நேற்று தெரிவித்தார்.


ஏற்க முடியாதுஇதற்கிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் நேற்று பேசுகையில், ''கடந்த மூன்று ஆண்டுகளில், கல்விக்கடன், 75 ஆயிரத்து 450 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. ''எனவே, கல்விக் கடன் தள்ளுபடி செய்ய, மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை,'' என்றார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக, மேற்கு வங்க மாநில, திரிணமுல் காங்., - எம்.பி., கல்யாண் பானர்ஜி, லோக்சபாவில் குற்றம்சாட்டினார்.அதற்கு பதில் அளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசுகையில், ''வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ''புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் பல திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.


ஒப்புதல்இதற்கிடையில், ராஜ்யசபாவில் பேசிய, ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபாத் யஸ்ஸோ நாயக், ''ராணுவ கல்வி நிறுவனமான, 'சைனிக்' பள்ளிகளில், 2020 - 21 கல்வியாண்டில், நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து பள்ளிகளில் பெண்களை சேர்க்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ''படிப்படியாக, 31 'சைனிக்' பள்ளிகளிலும், பெண்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
10-டிச-201918:30:54 IST Report Abuse
Mayavan Mayavan இவங்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. அதனால ரமணா படம் மாதிரி கிளைமாக்ஸ் முடிச்சிடுங்க
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-டிச-201910:08:10 IST Report Abuse
blocked user திமுகவிடம் கற்ற கண்ணியம் போல. இதற்க்கெல்லாம் அடி உதவுவது போல யாரும் உதவமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-டிச-201909:24:34 IST Report Abuse
elakkumanan உண்மையிலேயே கல்வி கட்டணம் கட்ட முடியாத அடிமட்ட நிலையிலிருப்பவர்கள் ரோஷமானவர்கள்............வாங்கிய கடனை ,....அது யாரிடம் இருந்து வாங்கினாலும்.................கூலி வேலை செய்தாவது கடனை அடைக்கிறார்கள்......அல்லது, கடனுக்கு ஈடான பொருளை (இடம்,வீடு,.....) கொடுத்து கடனை அடைக்கிறார்கள்...........சிறு காலதாமதங்கள் இருக்கலாம்.......உண்மையில், கீழ்த்தட்டு மக்கள், கடன் வாங்கும்போது, அடைக்கும் வழியை கவனமாக ஆராய்வார்கள், சில விதிவிலக்குகள், அசாதாரண சூழ்நிலைகள் தவிர்த்து, அவர்கள் நேர்மையாக இருப்பார்கள்.......இதற்கு. மிக பெரிய உன்மையான காரணம்...அவர்களுக்கு மீண்டும் தேவை படும்போது, பணம் கொடுக்க ஒரு சோர்ஸ் எப்போதும் தேவை. .........................மற்றபடி, வாங்கி வயிறு வளத்துப் போட்டு ,................சட்டம் பேசுறதது, தள்ளுபடி கேக்குறது, உரிமையை பற்றி ஆத்துவது, கட்சி துண்டு போத்திகிட்டு திரியுறது ......... ............. இதெல்லாம் கழக , கட்டுமர, திருட்டு கூட்டமே....வேறு வேறு பெயரில் ...........சில சமயம் பேறே இல்லாமலும்...........காசு ஏமாத்துவது கழகத்தின் பிறப்புரிமை...............உண்மையை உணருங்கள் வாசகர்களே .............நிர்மலா மேடம் செய்தது மிக சரி...................யாரு வூட்டு காசுன்னாலும் கழகம் ஏற்கும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X