பொது செய்தி

இந்தியா

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் கோரிக்கை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (38)
Advertisement
CitizenshipBill,CitizenshipAmendmentBill2019, இலங்கை அகதிகள், இந்திய குடியுரிமை, ரவிசங்கர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி கேட்டுள்ளார்.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நேற்று (டிச., 9) லோக்சபாவில் நிறைவேறியது. நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-201923:48:42 IST Report Abuse
Rajagopal ஈழத்து தமிழர்கள் இந்த சட்டத்தினால் இந்தியக் குடியுரிமை பெற்றால், பாஜகவிற்கு ஓட்டு போடுவார்கள். ஏனென்றால் இது வரை தமிழா, தமிழா என்று கூக்குரலிட்ட எந்த கட்சியும் இதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சீமான் போன்றவர்களுக்கு இது வயிற்றெரிச்சலைக் கிளப்பும். காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. கழகங்களும் ஒன்றும் செய்யவில்லை. பாஜக அரசுதான் இதற்கு வழி செய்திருக்கிறது. இப்போது ஈழ அகதிகள் ஓட்டு பாஜகவிற்குப் போனால், இவர்களுக்கு சொறி வந்த மாதிரி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
10-டிச-201923:09:12 IST Report Abuse
chakra வந்துட்டாரு அடுத்த நித்யானந்தா
Rate this:
Share this comment
Cancel
10-டிச-201921:55:17 IST Report Abuse
kulandhai Kannan பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லீம்களுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்று கூக்குறலிடும் திமுக, விசிக இத்தியாதி கட்சிகள், இலங்கையிலிருந்து தமிழகம்வரும் சிங்களருக்கும் குடியுரிமை கொடுக்கவேண்டும் என்று கேட்பார்களா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X