மசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி'

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (65)
Advertisement
CAB, 
CAB,CitizenshipAmendmentBill, ShivSena, RajyaSabha, குடியுரிமை_சட்டம், திருத்த_மசோதா, மசோதா, குடியுரிமை, சிவசேனா,

இந்த செய்தியை கேட்க

மும்பை: லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, தற்போது திருத்தம் செய்யவில்லை எனில் ராஜ்யசபாவில் ஆதரவு அளிக்க மாட்டோம் என 'பல்டி' அடித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்., தேசியவாத காங்., கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று (டிச.,09) தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு சிவசேனாவின் 18 உறுப்பினர்கள் உட்பட 311 பேர் ஆதரவளித்தனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாளை ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்படுகிறது.






சிவசேனா விளக்கம்:

காங்., உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மஹா.,வில் காங்., உடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா ஆதரவு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. இவ்வாறு சிவசேனா விளக்கமளித்தது. மேலும், அகதிகளாக வருவோருக்கு, ஒருவேளை குடியுரிமை அளிக்கப்பட்டாலும், அவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு, ஓட்டளிக்கும் உரிமை வழங்க கூடாது என வலியுறுத்தியது.




காங்., முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை அழிக்க முயற்சிக்கிறவர்கள், என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால், கூட்டணியில் இருக்கும் இருகட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவியதால் மஹா., அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, ராஜ்யசபாவில் மசோதாவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், லோக்சபாவில் நேற்று நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை. உரிய திருத்தங்கள் செய்யவில்லை எனில் நாங்கள் மசோதாவுக்கு ஆதரவளிக்க மாட்டோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201902:20:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வடகிழக்கு மாநிலங்களில் சிவசேனா ஜெயிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெய் பவானி, ஜெய் பிரியாணி.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-டிச-201901:40:53 IST Report Abuse
Loganathan Kuttuva சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் மும்பையில் விளையாடக்கூடாது என்று சொல்லி போராடி மைதானத்தின் பிட்சை சிவசேனாவினர் சேதப்படுத்தினர்.இந்து நிலைமாறி உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201901:01:35 IST Report Abuse
தமிழ்வேல் வாஜ்பேயி இருந்திருந்தால் பட்நாவிசையும், சாணக்கியரையும் தூக்கி இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X