பொது செய்தி

இந்தியா

வேலைவாய்ப்பு திறனில் 2வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement
EmployableTalent, Survey, Tamilnadu, Chennai, Coimbatore, List, Employment, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு_திறன், ஆய்வு, தமிழ்நாடு, தமிழகம், சென்னை, கோவை, கோயம்புத்தூர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அதிக வேலைவாய்ப்பு திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் அடிப்படையிலான பட்டியலில் சென்னை, கோயம்புத்தூர் முதல் 10 இடத்திற்குள் உள்ளன.

அதிக வேலைவாய்ப்பு திறன் கொண்ட மாநிலங்கள் மற்றும் நகரங்கள் குறித்து இந்தியா ஸ்கில் 2020 ஆய்வு முடிவு வெளியானது. மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 3 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம், தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில், கடந்தாண்டு 9வது இடத்தில் இருந்த மஹாராஷ்டிரா முதலிடத்திற்கும், 10வது இடத்தில் இருந்த தமிழகம் 2வது இடத்திற்கும் முன்னேறியது. அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த மேற்குவங்கம், தற்போது முதல் 10 இடத்திற்குள் கூட வரவில்லை. நகரங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பு திறன் கொண்டதில் மும்பை முதலிடத்திலும், ஐதராபாத் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு, புதுடில்லி, புனே, லக்னோ, சென்னை நகரங்கள் கடந்த 6 ஆண்டுகளாக 10 இடத்திற்குள் இடம் பெற்று வருகின்றன. மேலும், கடந்தாண்டு பட்டியலில் இருந்த நாசிக், குண்டூர் நகரங்களுக்கு பதிலாக மங்களூரு, கோயம்புத்தூர் இடம் பிடித்துள்ளன.






பெண்கள் அதிகம்:


எம்.பி.ஏ., படித்தவர்கள் 54 சதவீதம் பேர் அதிக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தனர். கடந்தாண்டு இன்ஜினியரிங் படிப்பு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பி.பார்மா, பி.காம்., பி.ஏ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் வேலைவாய்ப்பு சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு கிடைத்தவர்களில் ஆண்கள் 46 சதவீதம் பேரும், பெண்கள் 47 சதவீதம் பேரும் உள்ளனர். இது, 2018ல் ஆண்கள் 48 சதவீதம் பெண்கள் 46சதவீதம் ஆக இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் கோட்சே எங்கள் ஏழைத்தாய் மகனின் சானக்கிய திறமையால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறி, நம் மக்களுக்கு சோறு போட்டு, அவர்களுடைய வங்கியில் 15 இலட்சம் போட்டு தள்ளப்பட்டது. வரும், 1-1-2020 என் ஏழைத்தாய் மகன் அனைத்து மாநிலங்கலிலும் இராம இராஜயிம் செய்து அனைவருக்கும் வீடு வழங்கிவிடுவார். 😂😅😃😝😉😁 மேலும் முகேஷ் அம்பானி, ஆதானி போன்றோர்கள் கடன் வாங்கி பாஸ்போர்ட இல்லாமல், நாட்டை விட்டு தப்பி ஓட என் ஏழைத்தாய் மகன் உதவி செய்துவிடுவார். 😆😄👌😁😉😅😃🤭
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
11-டிச-201904:51:17 IST Report Abuse
chakra இதுக்கும் பழவண்டிக்காரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-டிச-201922:54:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வேலை வாய்ப்புத் திறன் - அதாவது வேலை பாக்குறவங்க அதிகம் இருக்காங்க, ஆனா வேலை வாய்ப்பு இல்லைன்னு அர்த்தம். வயித்துப்பசி அதிகம் இருக்குன்னா, பட்டினி, சோறு இல்லைன்னு அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X