மோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடியின் அன்பளிப்பாக வந்த பரிசு பொருட்களை ஏலம் விட்டதில், அரசிற்கு 15.13 கோடி ரூபாய் கிடைத்தது.


பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு செல்லும் போது அவருக்கு பல நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்தியாவிற்கு வரும் சில வெளிநாட்டு தலைவர்களும், பிரமுகர்களும் பிரதமருக்கு பல நினைவுப் பரிசுகளை வழங்குகின்றனர். இந்த பரிசுப் பொருட்கள் மத்திய அரசால் ஏலம் விடப்பட்டு, அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் நாட்டின் சில முக்கிய திட்டங்களுக்கு செலவிட மோடி உத்தரவிட்டுள்ளார். அதனால் அவ்வப்போது இந்த பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த பொருட்களை வாங்க பலரும் போட்டி போட்டு முன்வருவர்.

இந்த பரிசுப்பொருட்கள் குறித்து இன்று ராஜ்யசபாவில் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் கூறுகையில், ''பிரதமர் மோடிக்கு 2014 முதல் இதுவரை கிடைத்த அன்பளிப்புகள் 3 முறை ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 கோடியே 13 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

இந்த தொகை முழுவதும் கங்கை நதியை தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkalukkaga - India,இந்தியா
11-டிச-201909:29:47 IST Report Abuse
Makkalukkaga Dear Readers, it is a routine process to auction items or donate items accepted when one is in office. It regulated by Acceptance or Retention of Gifts or Presentations) Regulations, 1978, and the Foreign Contribution (Acceptance or Retention of Gifts or Presentations) Rules, 2012. It is happening fo a long time. Some politicians might have overruled. There is no room to boast or take pride of this. It is just a piece of information to be shared to parliament. Please don't debate on this.
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201906:01:50 IST Report Abuse
ஆப்பு நாமதான் வெளிநாடுக்குப் போயும் இங்கே ஆளுங்களை அங்கேருந்து வரவெச்சும் மக்கள் பணத்தில் பரிசுப் பொருள்களை அவிங்களுக்கு குடுக்கறோமே.. அவிய்ங்க பதிலுக்கு குடுக்கறாங்க. தானிக்கி தீனிக்கி சரிப் போயிந்தி.
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
11-டிச-201900:28:29 IST Report Abuse
Asagh busagh மோடிக்கு என்ன கோபாலபுரம் மாதிரி பல செலவா, இல்ல குடும்பமே இல்லனாலும் கொடநாட்டுல பதுக்க பேராசையா? தன் தலைவன், தலைவி எவ்வழியோ அவ்வழியே நடக்கிற தமிழனுக்கு இதெல்லாம் மூளைக்கு எட்டாத விஷயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X