பொது செய்தி

இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
PSLVC48,RISAT2BR1,ISRO,rocket,India,இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, 'பி.எஸ்.எல்.வி., - சி48' என்ற ராக்கெட்டை, இன்று (டிச.,11) இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், 'ரிசாட் - 2 பி.ஆர்.,1' என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.


வணிக ரீதியில்...


இந்த செயற்கை கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி48ராக்கெட், இன்று மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது. 'ரிசாட் -2 பி.ஆர்., 1' செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.






அரைசதம்:


இன்று விண்ணில் பாய உள்ள, பி.எஸ்.எல்.வி., - சி 48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 75வது ராக்கெட் என்ற சிறப்பை பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201907:28:10 IST Report Abuse
ravichandran Good luck ISRO Jai Hind
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X