நகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Murder, Couple,  CrimeShows, Inspired, கொலை, சீரியல், தம்பதி, மஹாராஷ்டிரா,

மும்பை: மஹாராஷ்டிராவில் நவ.,22ம் தேதி மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் தம்பதியினர் சிக்கியுள்ளனர். விசாரணையில், சீரியல்களை பார்த்து மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி மாவட்டத்தில் கடந்த நவ.,22ம் தேதி வடுனாவ்கர் பகுதியில் சிறிய குளத்தின் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், மூதாட்டியின் பெயர் சோனுபாய் சவுத்ரி என்பதும் தலையில் பலமாக தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. கொலையாளி குறித்து துப்பு துலக்குவதற்காக சோனுபாயின் வீட்டில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் வரையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சோனுபாயின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோம்நாத், நீலம் வக்டே தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு புதிய கார், பைக், ஐபோன், ஏசி உள்ளிட்ட பொருட்களை இ.எம்.ஐ.,யில் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கட்டும் இ.எம்.ஐ., தொகை அவர்களின் சம்பளத்தை விட கூடுதலாக இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டனர். சோனுபாய் நிறைய தங்க நகைகளை வாங்கி வைத்திருப்பதை அறிந்த தம்பதியினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். நவ.,21ம் தேதி சோனுபாயை வீட்டிற்கு அழைத்து உரையாடிய போது, திட்டமிட்டபடி தலையில் மட்டையால் தாக்கி கொலை செய்தனர்.

பின்பு, சோனுபாய் அணிந்திருந்த நகைகளை எடுத்து, உடலை சில தொலைவில் இருந்த குளத்தின் அருகே போட்டுவிட்டனர். மேலும், 'க்ரைம் பேட்ரோல்' மற்றும் 'சவ்தான் இந்தியா' போன்ற சீரியல்களை பார்த்து தான் இந்த கொலை செய்ய ஐடியா வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-டிச-201910:46:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொள்ளை அடிச்சுகொள்ளையனுக்கு நூறுவயசு வாழலாமா முதியாவாள் ஒருகால்ப்பாவுன் தள்ளிபோட்டுருந்தாலும் கொலை செய்துட்டு கொள்ளையை ஆடிப்பானுக அவனுக்கெல்லா சதாயிசுஇருக்கோனுமா என்னடாநியாயாம் இது அரசுசிலவுலே சோறு தண்ணீ நாடு நாசமாபோயிண்டுருக்கு தெவிடியாக்கு காலம் கொள்ளையனுக்கு காலம் பொம்பளையே நாசமப்பன்நாளும் நிம்மதியா அரசு சோறுபோடுமாம் கேவலமா இருக்கு கைதிகளை ப்ளீஸ் மனுஷனா நடத்தவேகூடாது அரசியல் கைதியானாலும் கொள்ளை அடிச்சுபொறுக்கித்தனம் செய்தாலும் கொடூரமான தண்டனியாவே இருக்கவேண்டும் பசி எல்லாம் தெரிஞ்சுதான் இவ்ளோபில்லின் லே கொள்ளை அடிசுசுருக்கான் அவனும் சொத்துக்கும் சாராயத்துக்கும் கொள்ளை அடிப்பவனும் ஒரேவிதம் தான் பேராசையேதான் காரணமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
11-டிச-201908:39:17 IST Report Abuse
Balasubramanian அட அந்த சீரியல்களே இந்த மாதிரியும் நடக்கலாம் ஜாக்கிரதை என்று ஏற்கனவே நடந்து முடிந்த குற்றங்கள் குறித்து தான். அதை அந்த மூதாட்டி பார்த்து தொலைத்து இருக்க கூடாதா? வயதான காலத்தில் நகைநட்டை போட்டு வலம் வந்தாலோ, பணம் பகட்டை வெளிப்படுத்தினாலோ, தனியாக இருக்கும் முதியவர்களுக்கு ஆபத்து தான்
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
11-டிச-201904:38:10 IST Report Abuse
vasumathi ஆனால் Mahabharata Ramayana சீரியலை பார்க்க வில்லை போலிருக்கிறது. 20 வருடம் உள்ளே போட்டு பிச்சைக்காரர்களாக இருந்ததும் தொலைந்து நீண்ட நாள் வாழட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X