பொது செய்தி

இந்தியா

இந்தியா '312' பதக்கம்! தெற்காசியாவில் கலக்கல்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement
SAFGames2019,SAG2019,SAGames2019,SouthAsianGames,sports,Nepal,SouthAsianGames2019,India,இந்தியா

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டில் இந்தியா 312 பதக்கங்கள் வென்று அசத்தியது.

நேபாளத்தின் காத்மண்டுவில் நடந்த 13வது தெற்காசிய விளையாட்டு இன்று(டிச.,10) நிறைவு பெற்றது. கடைசி நாளில் குத்துச்சண்டை பைனல்கள் நடந்தன. இந்தியா சார்பில் பங்கேற்ற விகாஷ் கிருஷ்ணன், 69 கி.கி., எடைப்பிரிவில் பாகிஸ்தானின் ஜெய்ப்பை சாய்த்து தங்கம் தட்டிச் சென்றார். பெண்கள் 64 கி.கி., பிரிவில் இந்தியாவின் மஞ்சு, நேபாளத்தின் பூனத்தை சாய்த்து தங்கம் வென்றார். பெண்கள் 'லைட் பிளைவெயிட்' பிரிவில் இந்தியாவின் கலைவாணி தங்கம் கைப்பற்றினார். குத்துச்சண்டையில் மட்டும் இந்தியாவுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்கள் கிடைத்தன.



கூடைப்பந்தில் அபாரம்:


ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் பைனலில் இந்தியா, இலங்கையை சந்தித்தது. இதில் 101-62 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவு பைனலில் இந்திய அணி 127-46 என்ற கணக்கில் நேபாளத்தை சாய்த்து, தங்கம் கைப்பற்றியது.பெண்கள் ஸ்குவாஷ் அணி, பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் பெற்றது. ஆண்கள் ஸ்குவாஷ் அணி, 4ல் 3 வெற்றியுடன் இரண்டாவது இடம் பெற, வெள்ளி தான் கிடைத்தது. ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் கைப்பற்றியது.





மொத்தம் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என இந்தியா 312 பதக்கங்களை குவித்தது. தெற்காசிய விளையாட்டில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கம் இது. இதற்கு முன் 2016ல் இந்தியா 309 பதக்கம் வென்றிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
11-டிச-201908:54:57 IST Report Abuse
Sukumar Talpady பாராட்டுக்கள் . ஆனால் தெற்காசிய போட்டிகளில் இந்தியா அதிக தங்க பதக்கங்கள் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல . ஆசியா போட்டிகளில் குறைந்தது 25 தங்க பதக்கங்களை பெற இந்தியா குறி வைத்து கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
11-டிச-201905:57:45 IST Report Abuse
ஆப்பு எல்லாம் நேரு செஞ்ச சதி... சாரி... நல்ல நியூசா... மோடி ஐயாவின் அபார வழிநடத்துதலில் 312 தங்கம். மேலும் சாதிப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X