அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை மசோதா விஷயத்தில் குழப்பியதா தி.மு.க.,?

Updated : டிச 12, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (16+ 168)
Advertisement
dmk,amendment_bill,amendment,bill,pass,parliament

குடியுரிமை மசோதா நிறைவேற்றத்தின் போது, லோக்சபாவில் வெளிநடப்பு செய்ததா அல்லது எதிர்த்து ஓட்டளித்ததா என்ற தேவையற்ற சர்ச்சையில், தி.மு.க., சிக்கியுள்ளது.

கடந்த திங்களன்று, லோக்சபாவில், குடியுரிமை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. விவாதத்தில் பேசிய, தி.மு.க., மூத்த எம்.பி., பாலு, ''இலங்கை தமிழர்கள் பலர், தமிழகத்தில், பல ஆண்டுகளாக தங்கி உள்ளனர். ''அந்த குறைபாட்டையும், சரி செய்ய வேண்டும். அரைமனதோடு கொண்டுவரும் இந்த மசோதாவில், எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்,'' என்றார். இதையடுத்து, தி.மு.க., எம்.பி.,க்கள், சபையை விட்டு வெளியேறினர்.

இது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சில நிமிடங்களில், மீண்டும் அனைவரும், உள்ளே வந்து அமர்ந்தனர். அறிமுக ஓட்டெடுப்பு நடைபெற்றபோது, மசோதாவை எதிர்த்து, ஓட்டளித்தனர்.மதியத்துக்கு மேல், மசோதா மீதான விவாதம், நடைபெற்றது. அதில், தி.மு.க., சார்பில், தயாநிதி பேசினார். விவாதம், நள்ளிரவு வரை நீண்டது.இறுதியாக, ஓட்டெடுப்பு நடைபெற்றபோது, அதில், மசோதாவை எதிர்த்தே, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஓட்டுப்போட்டதாக கூறப்படுகிறது. ஆதரவாகவும், எதிர்பாகவும், எந்தெந்த கட்சிகள் ஓட்டளித்தன என்ற, இறுதி விபரங்களை, லோக்சபா செயலகம், வெளிப்படையாக கூறுவது வழக்கமில்லை.

இதனால், குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து, தி.மு.க., ஓட்டுப்போட்டதா அல்லது, வெளிநடப்பு செய்ததா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இத்தனை குழப்பத்திற்கும், யாரும் எதிர்பார்க்காத வகையில், காலையில் செய்த வெளிநடப்பே காரணம் என, கூறப்படுகிறது. 'எதற்காக, வெளிநடப்பு செய்ய வேண்டும்; சில நிமிடங்களிலேயே, திரும்பி வந்து, அதே மசோதா அறிமுகத்தை எதிர்த்து, ஓட்டுப்போட வேண்டும்; இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது' என்ற கேள்விகள், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.இதை ஆராய்ந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அன்று பிறந்தநாள்.

அதற்காக, வெளிநடப்பு இடைவெளியில், அவரது அலுவலகத்திற்கு போய், அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவிட்டு, சபைக்கு திரும்பியதாக தெரிகிறது.ஆக, ஓர் அவசியமற்ற வெளிநடப்பால், குடியுரிமை மசோதா விவகாரத்தில், தி.மு.க., தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதேபோல தான், பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க சென்றபோதும், குழப்பம் அரங்கேறியது.தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனுவை அளிப்பதுதான் திட்டம் என்றால், கட்சியின் அனைத்து, எம்.பி.,க்களும் சேர்ந்து குழுவாக சென்று, பிரதமரை சந்தித்திருக்கலாம். ஆனால், மூத்த, எம்.பி.,க்கள், மூன்று பேர் மட்டும் போய் சந்தித்தனர்.

சக எம்.பி.,க்களுக்கு கூட, கடைசி நிமிடம் வரையில், அந்த சந்திப்பு குறித்த தகவல் தெரியாது. தமிழகத்தின் பிரச்னைகளை, வரிசையாக பட்டியலிட்டு, பொத்தாம் பொதுவாக அளிக்கப்பட்ட அந்த மனுவை விட, பிரதமருக்கு அளித்த புத்தகங்கள் தான் அந்த சந்திப்பில், அதிக முக்கியத்துவம் பெற்றன.தி.மு.க., இப்போது இருப்பதைப் போல, கடந்த, 2014- - 19 ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அதிக எண்ணிக்கையில், பார்லிமென்ட்டில் இடம்பெற்று இருந்தனர். போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல், அந்த, எம்.பி.,க்கள், கடைசிவரையில், குழப்பத்திலும் தவித்ததை காண முடிந்தது.

அதே காட்சிகள், தற்போது, தி.மு.க.,விலும் தென்படத் துவங்கியுள்ளது என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


துரைமுருகன் டில்லியில், 'டேரா'


இந்த கூட்டத்தொடரின் துவக்கத்தில், எம்.பி.,யாக, துரை முருகனின் மகன், கதிர் ஆனந்த் பதவியேற்றார். தன் மகனின் பதவியேற்பை காண வந்த, தி.மு.க.,வின் பொருளாளர் துரைமுருகன், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அப்போதிருந்தே டில்லியில் தங்கிவிட்டதாக தெரிகிறது. தினமும், பார்லிமென்ட்டிற்கு, துரைமுருகனும் வருகிறார். மாடத்தில் அமர்ந்து, சபை நடவடிக்கைகளை பார்ப்பது, மைய மண்டபத்தில் அமர்ந்து, எம்.பி.,க்களுடன் அரட்டை அடிப்பது என, அவர், 'ஜாலியாக' பொழுது போக்குவதை, காண முடிகிறது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (16+ 168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201915:15:47 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பில்டிங் ஸ்ட்ராங்கு , பேஸ்மெண்ட் வீக்கு
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-டிச-201911:44:14 IST Report Abuse
elakkumanan இப்போ தி மு க வை புலின்னு நினைக்கிற பலருக்கும், அதிர்ச்சி (2 g விசாரணை ) காத்திருக்கிறது. தி மு க ஒரு கொட்டை நீக்கிய சுத்தமான பிலி. பாருங்கோ. அய்யா. நல்லா பாருங்கோ. திமுக எத்தனை ஜென்மம் எடுத்தாலும், சொந்த நலனை தாண்டி எப்போதும் யோசிக்காது. பணம், பதவி மட்டுமே. மற்றதெல்லாம் அவர்களுக்கு அவசியமே இல்லை. பின் குறிப்பு. சில "மற்றதெல்லாம் " விஷயங்களை வாசகர் மற்றும் வாழ்நாள் திமுக கில்ஜிகளுக்காக: மானம், மறுவாதி, ரோசம்,சூடு, சொரணை, வெக்கம், உழைப்பு, நேர்மை, உண்மை, மக்கள் நலன், தேசம், தேச பாதுகாப்பு, தேச ஒற்றுமை, மற்றும் எல்லா நல்ல விஷயங்களும். இவனுவோ கொளப்பல சார். ப்ளீஸ், நல்லா இந்த திருட்டு கூட்டத்தை புரிஞ்சுக்கோங்க. கொளப்பவே இல்லை. சிறுபான்மை ஓட்டும் வேண்டும்..இந்துக்கள் ஓட்டும் வேண்டும். இது ஒரு தல தளபதி சலூன்................இதுதான் ஐடியா........தெளிவா மக்களை கொளப்புறானுவோ....
Rate this:
Share this comment
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-டிச-201912:38:41 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு வரும்போது பார்க்கலாம் உலகிலேயே ஆட்சியில் இருக்கும்போது ACCUSTE 1 என்று சொல்லி சிறையில் அடைக்க பட்ட கட்சி உங்கள் கட்சி தலைவி நீங்கள் எதெல்லாம் பேச ஐந்து பைசே உரிமை கூட கிடையாது இந்நேரம் இருந்திருந்தா சசி கூட இறுதிருப்பார் பார்த்து...
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
11-டிச-201918:40:24 IST Report Abuse
Gopiபோட்ட 5 - 6 வழக்குகளை தெலுங்கு குளுவாட்டியிடம் தெலுங்கு திமுக ஓடிப்போய் வாபஸ் கடிதத்தை கொடுத்துச்சு. அந்த டிராபிக் ராமசாமியிடம் காலில் விழாத குறையா தெலுங்கு திமுக கெஞ்சியது நினைவில்லையா . 17 தமிழர்களை பாய்ண்ட் பிளாக்கில் என்கவுண்டர் செய்த தாடி கேடி சந்திரபாபு இங்க எம் பி தேர்தலுக்கு வந்த போது ஏன் திருமா, வைகோ , உங்க மற்ற ரஜ கஜ படைகள் கருப்பு பலூன் விடல...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-டிச-201911:38:37 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தயாநிதி பேசியதை அமித் எப்படி முறைத்து பார்த்தார் தமிழச்சி பேசியதையும் ஷா பார்த்து கொண்டு தான் இருந்தார் இவர்கள் என்ன அடிமைகள் போலவா இருக்கு இங்கே தமிழ்நாட்டில் அவர்களுக்கு
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
11-டிச-201914:55:34 IST Report Abuse
மூல பத்திரம் ஹா ஹா, வடிவேலு ஒரு படத்தில் "செருப்பால" உரக்க கத்திவிட்டு மிக மெதுவாக என்னை அடிகடவுளே என்பார். பார்த்து ரசியுங்கள். வெறும் குரலினாலும் body languages வைத்தும் வீரத்தை கணக்கிட முடியாது. ஏன் மாமல்லபுரம் வந்த போது கருப்பு பலூன் விடவில்லை. எப்போது ஒருமுறை "சாடிஸ்ட்" என்கிற வார்த்தை பயன் படுத்தியவர்கள் இப்போது ஏன் அமைதியானார்கள்....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
11-டிச-201915:31:20 IST Report Abuse
dandyஹி ஹி ஹி இன்னும் திருட்டு கழகத்திற்கு சொம்பு தூக்க நாங்கள் தயார் ...60 வருடங்கள் கழக சுவரொட்டி ஒட்டிய குப்பனுக்கும் ..சுப்பனுக்கும் ..ஓலை குடிசை வாழ்கை ..கிழிந்த கோவணத்துடன் ...ஒரு வேலை கஞ்சி. கட்டுமரம் குடும்பம் வசிப்பது பல கோடி பெறுமதியான வீடுகளில் ..வளம் வருவது வெளிநாட்டு வாகனங்களில் ...ஹி ஹி ஹி தொண்டர்களின் பகுத்தறிவு .புல்லரிக்கின்றது .பகல் கொள்ளையை .தொடங்கியது கட்டுமரம் ஜெயா தொடர்ந்தார் ...பிடிபடாமல் pickpocket அடித்தால் உத்தமர் ?????? ஹி ஹி ஹி...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
11-டிச-201915:38:15 IST Report Abuse
dandyஇவர்கள் நடத்தும் ஊடகங்களில் முதலில் தமிழை பாவிக்கவும் ..பிறகு தமிழர் பற்றி பேசலாம் ..ஹி ஹி ஹி கட்டுமரம் கட்சிக்கு இலங்கை அகதிகளில் திடீர் பாசம் ...இவர்கள் அங்கு வந்த போது. இவர்களை கவனிக்க எங்களால் முடியாது என்று உன் இடம் சொல்லி இருந்தால் ..என்றோ இவர்கள் வேறு நாடுகளில் குடியேறி இருப்பார்கள் ..அந்த நாடுகளின் பிரஜைகள் ஆகி இருப்பார்கள் ..இன பற்று என்றால் இஸ்ரேல் நாடடை பார்த்து தெரிந்து கொள்ளவும் உகாண்டா நாட்டில் இருந்த கருப்பு யூதர்களை ..ரகசியமா தனி விமானம் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு கொண்டு வந்தார்கள் ..எத்தியோப்பிய நாட்டு யூதர்கள் வரவேற்க படடார்கள் ...இத்தனைக்கும் இவர்கள் ஹீப்ரு மொழி பேசுபவர்கள் அல்ல...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
11-டிச-201915:40:01 IST Report Abuse
dandyடெல்லியில் பாராளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கூவும் டீம் கா பிறவிகள் ..டாஸ்மாக் நாட்டில் பேசுவது ..எழுதுவது தமிங்கிலீஸ் ஹி ஹி ஹி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X