காஷ்மீர் தலைவர்கள் விடுதலையில் மத்திய அரசு தலையிடாது: அமித் ஷா

Added : டிச 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 காஷ்மீர் தலைவர்கள் விடுதலையில்  மத்திய அரசு தலையிடாது: அமித் ஷா

புதுடில்லி : 'ஜம்மு - காஷ்மீரில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து, அந்த யூனியன் பிரதேச நிர்வாகமே முடிவு செய்யும்; இதில், மத்திய அரசு தலையிடாது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.


கைது


லோக்சபாவில் நேற்று, காங்., லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தபோது, அங்கிருந்த, பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட அரசியல் கட்சிதலைவர்களை இன்னும் ஏன் விடுவிக்கவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசியதலைவருமான அமித் ஷா கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை விடுவிப்பது குறித்து, அந்த யூனியன் பிரதேச நிர்வாகமே முடிவு செய்யும்; இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது. எந்த ஒரு தலைவரையும், ஒரு நாள் கூட சிறையில் வைத்திருக்க வேண்டும் என, நாங்கள் விரும்புவது இல்லை.


எந்த தொடர்பும் இல்லை


காஷ்மீர் தலைவர்களை விடுவிப்பதற்கு சரியான நேரம் எது என, யூனியன்பிரதேச நிர்வாகம் கருது கிறதோ, அப்போது அவர்களை விடுவிக்கும். இதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை.தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவை, ஆறு மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக, காங்கிரஸ்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், பரூக் அப்துல்லா வின் தந்தை ஷேக் அப்துல்லாவை, அப்போதைய காங்., ஆட்சியாளர்கள், 11 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்தனரே... அதற்கு என்ன பதில் கூறப்போகின்றனர்.

இந்த விஷயத்தில், காங்கிரசை நாங்கள் பின்பற்ற விரும்பவில்லை. யூனியன் பிரதேச நிர்வாகம், இந்த விஷயத்தில் தானாகவே முடிவு எடுக்கும். காஷ்மீரில் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எந்த பகுதியிலும் தடை உத்தரவு அமலில் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
11-டிச-201913:45:32 IST Report Abuse
pradeesh parthasarathy நல்ல வேலை பாகிஸ்தான் முடிவு எடுக்கும்னு சொல்லாம விட்டியே ....அதுவரைக்கும் சந்தோசம் ...
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-டிச-201917:50:57 IST Report Abuse
ஆரூர் ரங்பாகிஸ்தானே முடிவெடுக்க வேண்டும் என்பதுதானே உண்டியல் குலுக்கிகளின் ஆசை?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X