ரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
ration_card,jesus,christ,photo,Jagan,Andhra,ஆந்திரா,

ஐதராபாத்: ஆந்திராவில் ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்துவின் படம் அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக, இயேசு கிறஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த ரேஷன் கார்டு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மறுபுரம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால், அவர் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் அரசு பஸ்சில், 'இயேசுவே உண்மையான கடவுள்', 'ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவி' என்ற விளம்பரம் அச்சடிக்கப்பட்டது வைரலாகி, ஜெகன் அரசை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் ரேஷன் கார்டில் இயேசு படம் அச்சிடப்பட்ட விவகாரத்தை அம்மாநில அரசு மறுத்துள்ளது. விசாரணையில், வத்லமாறு என்ற பகுதியை சேர்ந்த தெலுங்கு தேச கட்சியின் உறுப்பினர் ஒருவர், ரேஷன் கார்டில், ஏசு கிறிஸ்துவின் படத்தை அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. அவர் கிறிஸ்தவர் அல்ல.


latest tamil news



இதே நபர், கடந்த 2016ம் ஆண்டில், சாய்பாபா படத்தையும், 2017 மற்றும் 2018ல் திருப்பதி வெங்கடாஜலபதி படத்தையும் ரேஷன் கார்டில் அச்சிட்டுள்ளார். இயேசுவின் புகைப்படத்தை ரேஷன் கார்டில் பதிவிட்டு, சமூக அமைதியை குலைக்கும் வகையில், சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-டிச-201914:59:31 IST Report Abuse
Natarajan Ramanathan இசுலாமியன் முதல்வரானால் பின்லேடன் படத்தை அச்சிடுவானோ?
Rate this:
Cancel
11-டிச-201913:35:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சந்தர்ப்பம் கிடைத்தால் நம் கக்கூஸில் கூட நுழைந்து விடுவார்கள் இந்த மதமாற்ற கும்பல்கள். அரசு / ரயில்வே மருத்துவமனைகளில் கூட நுழைந்து விடுகிறார்கள். ரயில்களில் , பேருந்து நிலையங்களில் பிச்சைக்காரர்களை விட இவர்கள் தொல்லைதான் அதிகமாக இருக்கிறது.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
11-டிச-201911:44:38 IST Report Abuse
oce ஒரு பாய் ஆந்திர முதல்வராக வந்தால் அல்லா படத்தை ரேஷன் கார்டில் போடுவார். ஏண் உங்களுக்கு இந்த வீண் வம்பு.
Rate this:
natarajan s - chennai,இந்தியா
11-டிச-201912:18:46 IST Report Abuse
natarajan sஅல்லா படத்தை போட்டால் அவர் ஜிஹாதியால் நன்றாக கவனிக்கப்படுவார் ....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201912:20:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இன்னாமா ஆளுறவனுக்கு பல்லாக்கு தூக்குறான் பாருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X