கவர்னருடன் கருத்து வேறுபாடு; மே.வங்க சட்டசபையில் அமளி

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement
west_bengal,mamta,mamta_banerjee,சட்டசபை, மசோதா, மம்தா, அமளி, வெளிநடப்பு, போராட்டம்,  ராஜ்யசபா

கோல்கட்டா : பல முக்கிய மசோதாக்களுக்கு அனுமதி வழங்க கவர்னர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக கூறி ஆளும் திரிணமுல் காங். - எம்.எல்.ஏ.க்கள் மேற்கு வங்க சட்டசபையில் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கவனராக ஜக்தீப் தன்கர் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பல மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுக்கு கவர்னர் இன்னும் அனுமதி வழங்காததால் அவற்றை சபையில் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டசபை சமீபத்தில் இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சபை நேற்று கூடியபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் கவர்னரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கவர்னர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகவும் திரிணமுல் காங். - எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர். சட்டசபை வளாகத்தில் அவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது திரிணமுல் காங். - எம்.பி. டெரெக் ஓ பிரைன் இந்த விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பினார். அதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார். இதையடுத்து திரிணமுல் காங். - எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே பல்கலைகளில் கவர்னரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் படி இனி கவர்னரின் அறிவுரை அல்லது ஆலோசனை இல்லாமல் மாநில அரசின் உயர் கல்வித்துறையின் அனுமதி பெற்று பல்கலைகளின் உயர் மட்ட கூட்டங்களை நடத்த முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
11-டிச-201912:09:19 IST Report Abuse
Darmavan கவர்னர் மத்திய அரசின் பிரதிநிதி.சட்டப்படி அவருக்கு மதிப்பளிக்க வேண்டும்.ஆனால் மம்தா பேர்கள் வேலைக்காரர் போல் நடத்துகிறாள்.ரௌடித்தனத்தை கட்டவிழ்த்து விடுகிறாள்.மத்திய அரசு மம்தாவை தண்டிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
11-டிச-201908:26:35 IST Report Abuse
blocked user மம்தாவுக்கு மம்தாவாலேயே பிரச்சினை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X