சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டுடியோவில் திருட்டு போலீசார் விசாரணை

Added : டிச 10, 2019
Advertisement

வேப்பூர்:வேப்பூர் அருகே ஸ்டுடியோவில் கேமரா மற்றும் லேப்டாப் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேப்பூரை சேர்ந்தவர் ராஜா, 25. இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தனது நண்பர் விஜயுடன் சேர்ந்து சேப்பாக்கத்தில் போட்டோ ஸ்டுடியோ துவங்கினார். இருவரும் நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்றனர்.நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து, டிஜிட்டல் கேமரா, லேப்டாப், ரூ. 5 ஆயிரத்தை திருடி சென்றனர்.நேற்று காலை கடைக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X