அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுடன் பேச பா.ஜ.,வில் குழு அமைப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (7+ 5)
Advertisement
admk,bjp,அதிமுக,பாஜ,pon_radhakrishnan,பொன்.ராதாகிருஷ்ணன்,

சென்னை : ''உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச, பா.ஜ., சார்பில், மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் மாநில பணிக்குழு கூட்டம், நேற்று நடந்தது. பா.ஜ., மேலிட பார்வையாளர் முரளிதர் ராவ் தலைமை வகித்தார். வெற்றிபின், உள்ளாட்சி தேர்தல் மாநில பணிக்குழு தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி என, அனைத்திலும், எந்தப் பகுதியில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்பதை, அந்தந்த பகுதியை சேர்ந்த, பா.ஜ., வினர் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மாநில தேர்தல் பணிக்குழு சார்பில், இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்தெந்த இடங்களைப் பெறலாம் என்று பேச, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் முடித்துள்ளோம். அடுத்து, களப்பணிக்கு செல்ல வேண்டியுள்ளது.மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சியிடம் பட்டியல் அளிப்பர்; பரஸ்பரம் அமர்ந்து பேசுவர்.


பேச்சு


ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்த கட்சிகள் பலமாக உள்ளதோ, அந்த கட்சி, அதிக இடங்களை பெறும்; மற்ற கட்சிகளுக்கு, விகிதாசார அடிப்படையில் அல்லது கட்சி பலமாக உள்ள பகுதி அடிப்படையில், இடங்களை பகிர்ந்து கொள்ள பேச்சு நடக்கும்.ஒவ்வொரு ஒன்றியத்திலும், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் பலம் என்ன என்பது கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, சில மணி நேரங்களுக்குள், பேசி முடிக்கப்படும்.

ஒரே இடத்தை பல கட்சிகள் கேட்கும்போது, பேசி தீர்வு காணப்படும். சதவீத அடிப்படையில், கேட்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இடங்கள் எண்ணிக்கை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். தி.மு.க., தேர்தலை எதிர்கொள்ள, ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. அடுத்தடுத்து, எந்த வகையில் வழக்கு தொடரலாம் என பட்டியலிட்டு, வழக்கு தொடர்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


சுமூக பேச்சு!


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க.,வுடன் பேச, பா.ஜ.,வில் அமைக்கப்பட்ட, மாவட்ட குழுவில், இருவர் முதல் ஐந்து பேர் வரை இடம் பெற்றுள்ளனர். 'குழுவில் உள்ளவர்கள், சுமூகமான முறையில், கூட்டணி கட்சிகளுடன் பேசி, அதிக இடங்களில், கூட்டணி வெற்றி பெற பணியாற்ற வேண்டும்' என, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-டிச-201911:47:18 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இந்த குழுவில் இருக்கிறவங்க கூட பிஜேபி க்கு வோட்டு போடுவதில்லை என்று தெரிகிறது இந்த குழுவில் உள்ளவர்கள் வோட்டு போட்டாலே நோட்டாவை மிஞ்சலாமே என்னமோ போங்கள்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201911:32:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதிகார பிச்சைன்னு..
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
11-டிச-201910:49:22 IST Report Abuse
நக்கீரன் இன்னமும் பிஜேபி அதிமுக திருடர்களுடன் கூட்டு சேர நினைப்பது எவ்வளவு பெரிய கேவலம். பிஜேபி தங்களை நம்பும் கொஞ்ச நஞ்ச மக்களின் செல்வாக்கையும் இழந்து கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X