வெற்றி பெறாத எம்.எல்.ஏ.க்களால் எடிக்கு 'தலைவலி'

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (13+ 16)
Advertisement
karnataka,yeddyurappa,bjp,பாஜ,எடியூரப்பா,எடி,தேர்தல்,mla

பெங்களூரு : கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெறாத இரண்டு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க விரைவில் டில்லி செல்கிறார்.

கர்நாடகத்தின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெற்றது. போட்டியிட்ட 13 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஹொஸ்கோட் நாகராஜ், ஹுன்சூர் விஸ்வநாத் ஆகிய இருவர் மட்டும் தோல்வியடைந்தனர். வெற்றி பெற்ற அனைத்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார்.

ஆனால் தங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தோல்வியடைந்தோர் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர்கள் தங்களை எம்.எல்.சி. ஆக தேர்வு செய்து அமைச்சராக்கும்படி வலியுறுத்துகின்றனர்.தேர்தலில் தோல்வியுற்ற ஹொஸ்கோட் நாகராஜ் நேற்று காலையில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தார்.அவரை சமாதானம் செய்ய முயற்சித்த முதல்வர் எடியூரப்பா 'நீங்கள் ராஜினாமா செய்ததால் தான் நான் முதல்வராக முடிந்தது.

உங்களை எம்.எல்.சி.யாக்கி அமைச்சரவையில் சேர்ப்போம்' என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.அப்போது 'உங்களை நம்பி தானே வந்தோம். இல்லையென்றால் தொகுதியில் எங்கள் செல்வாக்கு குறைந்துவிடும்' என கடுமையாக பேசினர். அனைத்தையும் பொறுமையாக கேட்ட அவர் 'கண்டிப்பாக நாகராஜுக்கு தகுந்த பதவி கொடுக்கப்படும்' என உறுதியளித்தார்.இது போன்று ஹுன்சூர் விஸ்வநாத்தும், ரமேஷ் ஜார்கிஹோளி மூலம் அமைச்சர் பதவிக்கு 'லாபி' செய்துள்ளார்.

இது குறித்து வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்தவர்கள் ஓரிரு நாட்களில் ஒன்று கூடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். விஸ்வநாத்தை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தவும் முதல்வர் முடிவு செய்துள்ளார்.இவர்களை சமாளிப்பதற்குள் அரவிந்த லிம்பாவளி ராமதாஸ் உமேஷ் கத்தி உட்பட பா.ஜ.வின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இம்முறை அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டுமென அடம்பிடித்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட துறைகள் தான் வேண்டுமென நெருக்கடி கொடுக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்துக்குள் டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க முதல்வர் எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை அமைச்சரவை விரிவாக்கம் யாருக்கு என்ன துறை ஒதுக்குவது போன்ற விஷயங்கள் குறித்து பேசவுள்ளார்.பா.ஜ. கட்சி வட்டாரங்கள்படி டிச. 16 அல்லது 20 ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


காங். மேலிட பொறுப்பாளர் விலகல்


இடைத்தேர்தல் தோல்வி அறிந்த மூன்று மணி நேரத்திலேயே காங். சட்டசபை குழு தலைவர் பதவியிலிருந்து சித்தராமையாவும்; கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து தினேஷ் குண்டுராவும் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.படுதோல்விக்கு தானும் பொறுப்பேற்று மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து காங். எம்.பி. வேணுகோபால் நேற்று விலகினார். இதற்கான கடிதத்தை காங். தலைவி சோனியாவுக்கு நேற்று அனுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-டிச-201916:20:44 IST Report Abuse
Endrum Indian ஆகா மொத்தம் இது தான் ஜன சேவை என்னும் போர்வையில் வரும் எம் எல் ஏக்களின் வரைமுறை ????நாசமாகப்போகட்டும் இந்த மாதிரி இருக்கும் அரசியல்வாதிகள்????/
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201917:15:39 IST Report Abuse
தமிழ்வேல் சாணக்கியரைப் பார்த்துட்டு வருவாரா ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201917:14:31 IST Report Abuse
தமிழ்வேல் பதவி அதோடு 1000 கோடியுமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X