அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் சொதப்புவது எப்படி? தமிழக ஆணையத்துக்கு அத்துபடி

Updated : டிச 12, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
TN,TamilNadu,election,தமிழகம்,election_commission,தமிழ்நாடு,தேர்தல்,உள்ளாட்சி

கோவை : உள்ளாட்சி தேர்தலை நடத்தும் தமிழக தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து பல்வேறு வகையிலும் சொதப்பி வருவது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு அரசுத்துறையாகவே ஆணையம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறுவது வழக்கம்.அதற்கு தகுந்தபடிதான் தற்போதைய தமிழக தேர்தல் ஆணைய செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.

தேர்தல் எப்போது நடத்துவது என்பதில் தொடங்கிய சொதப்பல் எத்தனை கட்டங்களாக நடத்துவது எந்தெந்த உள்ளாட்சிகளுக்கு நடத்துவது எந்த மாவட்டங்களை விடுவது என்பதாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பல்வேறு வழக்கு விவகாரங்களை தொடர்ந்து நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் பதிவான வேட்பு மனுக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் மாநில ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை.

மத்திய தேர்தல் ஆணையம் லோக்சபா சட்டமன்ற தேர்தல் காலங்களில் உடனுக்குடன் வேட்பு மனு தாக்கல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றி வந்தது.அதேபோன்று 'அப்டேட்' செய்வதற்கு மாநில ஆணையம் மேற்கொண்ட முயற்சி சொதப்பலில் முடிந்துள்ளது. பல மாவட்டங்களில் இன்னும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை பூஜ்யமாகவே உள்ளது.தங்களது வார்டில் யார் யார் மனு தாக்கல் செய்துள்ளனர் எத்தனை பேர் மனு கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை கூட வாக்காளர்கள் அறிய முடியவில்லை.

இது மட்டுமின்றி வார்டு இட ஒதுக்கீடு விவரங்களை அறியவும் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டும் என்ற நிலையை ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இணையதள வசதி பெருகி விட்ட இந்த காலத்திலும் ஆன்லைன் வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஆணையம் செயல்படுவது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-டிச-201916:29:17 IST Report Abuse
ஜெயந்தன் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டிற்கு இந்த தேர்தல் ஆணையத்தால் ..பெரும் தலை குனிவு....
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
11-டிச-201915:32:40 IST Report Abuse
siriyaar 95% அரசு ஊழியர்கள் தீமுக ஆதரவு அவர்கள் எப்படி இதை செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ramesh - chennai,இந்தியா
11-டிச-201910:51:36 IST Report Abuse
ramesh தேர்தலை ஒழுங்காக நடத்தாத தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு மக்களின் வரி பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .வேலை செயாத அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பதே சட்ட விரோதம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X