பாலியல் பலாத்காரம் அதிகரிப்பு; லோக்சபாவில் காங்., ஆவேசம்

Updated : டிச 11, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (11)
Advertisement
parliament,congress,rape,பலாத்காரம்,அதிகரிப்பு,லோக்சபா,காங், ஆவேசம்

புதுடில்லி : ''நாட்டில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 'மேக் இன் இந்தியா' என்பது, இப்போது, 'ரேப் இன் இந்தியா' வாக மாறி வருகிறது,'' என, லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.

லோக்சபாவில் நேற்று, காங்., குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:உத்தர பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய பகுதிகளில், பெண்கள், குழந்தைளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தது எல்லாருக்கும் தெரியும். உ.பி., மாநிலம் உன்னாவில், 23 வயது பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின், எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற செய்திகளை கேட்கும்போது, வெட்கமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே அனைத்து பொருட்களையும் தயாரிக்கும், 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பதை பார்த்தால், நாடு, 'ரேப் இன் இந்தியா'வாக மாறி வருவதாக தோன்றுகிறது. ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எவரும், இது குறித்து பேசாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சுக்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் ஆளும், சத்தீர்கர் மாநலத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து, அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
11-டிச-201916:32:46 IST Report Abuse
S.BASKARAN திமிர் பிடித்தவன் அநாகரீகமான பேச்சு.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
11-டிச-201915:21:16 IST Report Abuse
dandy சடடம்.... ஒழுங்கை மக்கள் மதிக்கும் போதே இம்மாதிரி சம்பவங்கள் நடக்க முடியாது பல ஐரோப்பிய நாடுகளில் இளம் பெண்கள் தனியாயாக நடு இரவில் வீதியில் போக முடியும் ...ஹி ஹி ஹி டெல்லியில் பகலில் கூட முடியாது ... கட்டுமரம் .காட்டிய ஒழுங்கில் ..ஒழுக்கத்தில் டாஸ்மாக் நாட்டு மக்கள் சென்று கொண்டு உள்ளார்கள் ...பரிதாபம்
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
11-டிச-201913:28:48 IST Report Abuse
unmaitamil கேரளவில், சமீபத்தில பாதிரியாருங்க கன்னிகா ஸ்திரிகளையும், பாவமன்னிப்பு கேட்ட குடும்ப பெண்களை பிளாக்மெயில் செய்தும் பலாத்கார லீலை செய்த செய்திகள் இவனுக்கு தெரியாதா??? வாடிகன் அவர்கள் மேல் உள்ள புகார்களை வாபஸ் வாங்க சொல்லி கன்னிகாஸ்திரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் தெரியாத மூடன் இவர்கள். கேரளாவில் கம்யூனிஸ்ட் MLA பலாத்கார கேஸை கட்சி விசாரணை செய்கிறது என்கிறார் கம்மி முதல்வர். போலீஸ் கேஸ் எடுக்க மறுக்கிறது. பெண் பலாத்காரத்துக்கு காரணமே, இவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆதரவு தராததுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X