சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் பதுக்கலா? போலீசார் சோதனை

Added : டிச 10, 2019
Advertisement
 வெங்காயம் பதுக்கலா? போலீசார் சோதனை

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காய்கறி கடைகளில் சோதனை நடத்தினர்.
வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசார், மாவட்டம் வாரியாக காய்கறி கடைகள், வெங்காய மண்டிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி நாராயணன், விஜயன் ஆகியோர் நேற்று முன்தினம் கடலுார் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் பகுதி காய்கறி கடைகள், மண்டிகளில் வெங்காயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என, திடீரென சோதனை நடத்தினர். இதேபோல், பண்ருட்டி, வடலுார், நெய்வேலி பகுதி மார்க்கெட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த சோதனையில், எந்த வியாபாரியும் வெங்காயத்தை பதுக்கி வைக்கவில்லை என போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X