சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி

Added : டிச 10, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி

வேலுார் : ஓடும் பஸ்சில், இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபரை, சரமாரியாக அடித்து உதைத்த பயணியர், அவரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெகன், 27. இவர், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணை, ஒருதலையாக காதலித்து வந்தார். சமீபத்தில், அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஜெகன், அந்த பெண்ணிடம், தன் காதலை கூறியுள்ளார்; அவர், மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண், நேற்று காலை, 10:45 மணியளவில், வாணியம்பாடி செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் பயணித்த ஜெகன், எதிர்பாராத நேரத்தில், இளம்பெண்ணிற்கு தாலி கட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தாலியை கழற்றி எறிந்தார். சக பயணியர், ஜெகனை வளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின், வாணியம்பாடி காவல் நிலையத்தில், ஜெகனை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
13-டிச-201909:13:52 IST Report Abuse
oce வீணாய் போன தடியன். காமவெறி பிடித்தவன்.
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
12-டிச-201911:02:39 IST Report Abuse
Kumar periyaar புடிக்காதவன் எந்த பின்னேயே தூங்கும் போது தாலி கட்டினால் கணவன் ஆவான் என்ன ட நியாயம் ஆண்களுக்கு பெண் அடிமையே இன்றும்
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
13-டிச-201920:37:43 IST Report Abuse
jaganஇதெல்லாம் சொரியார் சொன்னது. இங்கு பெனாத்த வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-டிச-201903:57:00 IST Report Abuse
 nicolethomson தமிழக டிவி சீரியல்கள் எவ்வளவு தூரம் வேலை செய்ய வைக்குது பாருங்க
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-டிச-201904:45:21 IST Report Abuse
Sanny இவர் சு. சாமி செய்யப்போனதை செய்திருக்கிறார், சீரியல்கள் கரணம் அல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X