பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி

Added : டிச 10, 2019 | கருத்துகள் (11)
Share
வேலுார் : ஓடும் பஸ்சில், இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபரை, சரமாரியாக அடித்து உதைத்த பயணியர், அவரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெகன், 27. இவர், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணை, ஒருதலையாக காதலித்து வந்தார். சமீபத்தில், அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயமானதாக
 பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி

வேலுார் : ஓடும் பஸ்சில், இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபரை, சரமாரியாக அடித்து உதைத்த பயணியர், அவரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெகன், 27. இவர், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணை, ஒருதலையாக காதலித்து வந்தார். சமீபத்தில், அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஜெகன், அந்த பெண்ணிடம், தன் காதலை கூறியுள்ளார்; அவர், மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண், நேற்று காலை, 10:45 மணியளவில், வாணியம்பாடி செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் பயணித்த ஜெகன், எதிர்பாராத நேரத்தில், இளம்பெண்ணிற்கு தாலி கட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தாலியை கழற்றி எறிந்தார். சக பயணியர், ஜெகனை வளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பின், வாணியம்பாடி காவல் நிலையத்தில், ஜெகனை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X