சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான நகைகளுக்கு 'இன்சூரன்ஸ்' தொகை

Added : டிச 11, 2019
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட, 13.75 கிலோ நகைகள் மாயமான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, 'இன்சூரன்ஸ்' தொகை வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில், பியூனாக பணியாற்றியவர், மாரிமுத்து, 42. இவர், ஏப்ரலில், வங்கியிலிருந்து, 13.75 கிலோ தங்க நகைகளுடன் மாயமானதாக, புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில், சடலமாக மீட்கப்பட்டார். அவர் எடுத்துச் சென்ற நகைகள் குறித்த விபரங்கள் தெரியவில்லை.

இதனால், நகை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள், வங்கி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். கொள்ளை தொடர்பாக, புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்தும், எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.

இதனிடையே, மாயமான நகைகளுக்கான இன்சூரன்ஸ் தொகை, வங்கிக்கு வந்துள்ளது. அவற்றை, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, நகைகளுக்கான பணம், இன்றைய மதிப்பில், அவரவர் வங்கிக் கணக்கில், நேற்று முதல், வரவு வைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X