சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மீது 'போக்சோ'

Added : டிச 11, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 ஆசிரியர் மீது 'போக்சோ'

நாகர்கோவில் : விடுமுறை நாளில், பள்ளியில், மாணவியுடன் இருந்த ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் உள்ள, அரசு பள்ளியில், விடுமுறை நாளில், வகுப்பறையில் மாணவி ஒருவருடன், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், 30, என்பவர் இருந்துள்ளார். அப்பகுதியினர், பள்ளிக்குள் புகுந்து, ஆசிரியரை தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர்.

மாணவி தரப்பில் புகார் அளிக்காததால், ஆசிரியர் மீது வழக்குப்பதியவில்லை. தன்னை தாக்கியதாக, ஆசிரியர் அளித்த புகாரின்படி, அந்த பகுதியைச் சேர்ந்த, ஒன்பது பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் தாக்கப்பட்ட, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், மாணவி பெற்றோர் அளித்த புகாரின்படி, அனைத்து மகளிர் போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-டிச-201909:58:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா உங்களையெல்லாம் கழுவுளேதான் ஏற்றவேண்டும் அப்போதான் திருந்தவாய்ப்புண்ண்டு சத்தியமா . இல்லேன்னா பல்லுபோனகிழவி லெந்து பல முளைக்காத பொன்னுக்குட்டிகளையும் நாசம் செய்யவே பிறந்துருக்கானுக எல்லோரும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-டிச-201907:49:07 IST Report Abuse
Bhaskaran ஆந்திராவில் கொண்டுவந்ததுபோல் சட்டம் கொண்டுவந்து முதல் முதலாக இவனை தூக்கில் போடணும் .குரு ஸ்தானத்துக்கே களங்கம் ஏற்படுத்தியகயவன் இவன்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-டிச-201920:53:45 IST Report Abuse
DARMHAR இந்தமாதிரி சிறுமிகளையும் பள்ளி மனைவியர்களையும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X