பொது செய்தி

இந்தியா

ரூ.2,000 நோட்டு செல்லாதா?

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (31)
Advertisement
2000,rs2000,denomination,anurag,anurag_thakur,parliment,ரூ2000,செல்லாதா?

புதுடில்லி : 'புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டு செல்லாத நோட்டாக அறிவிக்கப்படும் என்ற தகவல் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம்' என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளதாவது: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்து நிறுத்தவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.





வரி வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கவும், டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், செல்லாத ரூபாய் நோட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்து, மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை. எனவே, இது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
11-டிச-201921:03:21 IST Report Abuse
Sridhar Rengarajan இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தேவையே இல்லை. அதை முற்றாக ஒழிக்கவேண்டும். நாட்டின் அதிக மதிப்பு கொண்ட நோட்டாக ஐநூறு ரூபாய் இருக்கவேண்டும். டிஜிட்டல் டிரான்செக்ஷன் இன்னும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக 2020 ஜனவரி 1 முதல் மது விற்பனை கரன்சியில் கிடையாது. கிரெடிட் கார்டில் மட்டும்தான் விற்கப்படும் என்று அரசு டிசம்பர் 20 ந்தேதி அறிவித்தால். ஜனவரி ஒண்ணாம் தேதி காலை கடை திறக்கும் போது, குடிமகன்கள் கையில் கிரெடிட் கார்டோடு வரிசையில் நிற்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-டிச-201915:52:35 IST Report Abuse
இந்தியன் kumar டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகம் பயன் படுத்தப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-டிச-201915:51:10 IST Report Abuse
இந்தியன் kumar இரண்டாயிரம் நோட்டுக்கள் ஒழிக்க பட வேண்டும் அப்போது தான் பணம் பதுங்குவது குறையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X