அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகள் கூவிக் கூவி விற்பனை! ஆணையம் எச்சரிக்கை

Updated : டிச 12, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (16+ 1)
Advertisement
TN,TamilNadu,election,election commission,video,viral,தமிழகம்,தமிழ்நாடு,தேர்தல்,பதவி,ஏலம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கேலிகூத்தாக்கும் வகையில் பதவிகளை கூவிக்கூவி விற்பனை செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது. நான்கு ஊராட்சிகளில் தலைதுாக்கிய பதவியை ஏலம் விடும் அராஜகம் மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாமல்அலட்சியம் காட்டிய மாநில தேர்தல் ஆணையம் நேற்று கடும் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக டிச. 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கும் துணைத் தலைவர் பதவி 15 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியானது. பதவிகளை ஏலம் விடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

இதேபோன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பனைக்குளம் ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள இரண்டு ஊராட்சிகளில் தலைவர் பதவி அதிகபட்சமாக 60 லட்சம் ரூபாய் மற்றும் 10 சென்ட் நிலத்திற்கும் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல உள்ளாட்சிகளில் பதவிகளை கைப்பற்றுவதற்கு ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்பட்சத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும்.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது. இவ்வாறு ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. போலீசார் உதவியுடன் இவற்றை கட்டுப்படுத்தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை கேலிக்கூத்தாக்கும் வகையிலான இந்த ஏல விவகாரம் 2011ல் நடந்த உள்ளாட்சிதேர்தலிலும் அரங்கேறியது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் இதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலர் வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் உடனுக்குடன் விளக்கம் கேட்கப்பட்டது. அதனால் பதவிகளை ஏலம் விடுவது முற்றிலும் தடுக்கப்பட்டது. தற்போது நான்கு ஊராட்சிகளில் அரங்கேறியுள்ள அராஜகத்தை மாநில தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில்கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவது மற்ற மாவட்டங்களிலும் உள்ளாட்சி பதவிகள் ஏலம் போவதற்கு வழிவகுப்பதாக அமைந்து விடும்என்பதால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் ஆணையர் பழனிசாமி செயலர் சுப்பிரமணியம் ஆகியோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்துஉள்ளாட்சி அமைப்பு பதவிகளை தேர்தல் இன்றி ஏலம் விடுவதை தடுக்க மாவட்ட கலெக்டர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


'மக்களாட்சிக்கு எதிரானது'


மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சட்டத்திற்கும் மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடக்கும் இத்தகைய செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்.

ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணர செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள் நிகழாத வண்ணம் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (16+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-டிச-201905:59:51 IST Report Abuse
D.Ambujavalli இன்று லட்சம், கோடிகளைக் கொட்டி பதவிகளை ஏலம் எடுத்து விட்டு நாளை மாநிலத்தையே ஏலம் எடுக்க முன்னாடிதான் இது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201919:16:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பதவி வெறியில் எம்எல்ஏக்களை கடத்தி தலைக்கு 100 கோடி, மந்திரி பதவின்னு லஞ்சம் கொடுத்து, பணநாயகம் வெறியாட்டம் போடும் போது காந்தியின் குரங்குகளை போல சகலத்தையும் மூடிக்கொண்டு இருந்த தேர்தல் ஆணையம் தான் இவங்களுக்கும் வழிகாட்டி.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-டிச-201915:39:11 IST Report Abuse
இந்தியன் kumar பணம் இருக்கிறவன் தான் ஜெயிப்பான் என்பது மிகவும் வெட்க கேடானது இந்த நிலை மாற வேண்டும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-டிச-201905:39:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தேர்தல் பத்திரம் வாழ்க. வருஷத்துக்கு பத்தாயிரம் கோடி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X