சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : டிச 11, 2019
Advertisement

விபத்தில் என்.எல்.சி., அதிகாரி பலி

கடலுார்: கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர், ரமேஷ், 54; என்.எல்.சி., நிறுவனத்தில், துணை பொது மேலாளராக புணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி விஜயாவுடன், 'மஹிந்திரா' காரில், பெங்களுருலிருந்து நெய்வேலிக்கு சென்றார்.காரை, நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 29, ஓட்டினார். நேற்று அதிகாலை 4:30 மணியளவில், கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த பெரிய நெசலுார் வந்தபோது, எதிர்பாராத விதமாக, சாலையோர புளிய மரத்தில், கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரமேஷ், அதே இடத்தில் இறந்தார்.காயமடைந்த விஜயா, ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி சாவில் மர்மம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பென்னிக்கலைச் சேர்ந்தவர், பசவன், 47. இவரது தம்பி, முனிகிருஷ்ணன், 35. இருவரும், கூலித்தொழிலாளர்கள். இருவருக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் காயமடைந்த முனிகிருஷ்ணன், கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார். அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், வீடு திரும்பிய அவர், நேற்று காலை, திடீரென உயிரிழந்தார்.அவரது சாவில் சந்தேகம் இருப்பதால், உத்தனப்பள்ளி போலீசார் பசவனிடம் விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் சுனாமி நகரைச் சேர்ந்தவர், பிரவீன். இவரது மனைவி, மோனிஷா, 21. ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம் இரவு, மோனிஷா, தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்தவர், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, மோனிஷா உயிரிழந்தார். பூம்புகார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கார் மோதி 2 பெண்கள் பலி

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பொலவக்காலிபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி, சாந்தி, 53. அதே பகுதியை சேர்ந்த, மோகன்குமார் மனைவி ஜோதிமணி, 44.கூலித் தொழிலாளிகளான இருவரும், பொலவக்காலிபாளையம் பஸ் நிறுத்தத்தில், நேற்று காலை, 11:30 மணிக்கு காத்திருந்தனர். அப்போது, கோபியில் இருந்து, ஈரோடு நோக்கி சென்ற, 'மாருதி வேகன் ஆர்' கார், சாலையோரம் நின்றிருந்த இருவர் மீதும் மோதி, நிற்காமல் சென்றது.பலத்த காயமடைந்த இருவரும், கோபி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். இதுகுறித்து, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

அருவியில் குளித்தவர் பலி

தேனி: மதுரை, ஆரப்பாளையம் கிராஸ் சாலையைச் சேர்ந்தவர், நடராஜ், 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். இவர், தேனி அரண்மனைப்புதுாரில் உள்ள, அவரது சகோதரர் ரமேஷ் வீட்டிற்கு சென்றார்.இருவரும், திருக்கார்த்திகையையொட்டி, பூதிப்புரம் சன்னாசியப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். பின், மரக்காமலை வெள்ளி விழுந்தான்கேணியில் உள்ள அருவியில் குளித்தனர். அப்போது நடராஜ், கால் இடறி, 120 அடி பாறை பள்ளத்தில் விழுந்து, இறந்தார். தேனி தீயணைப்பு வீரர்கள், நடராஜ் உடலை மீட்டனர்.பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X