வெங்காயம் பதுக்கினால் 7 ஆண்டு சிறை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் பதுக்கினால் 7 ஆண்டு சிறை

Updated : டிச 12, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (6)
Share
சென்னை : ''மத்திய அரசு நிர்ணயித்துள்ள எடையை விட கூடுதலாக வெங்காயம் பதுக்கினால் ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தமிழக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சாந்தி எச்சரித்தார். அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு மொத்த வியாபாரிகள் 25 டன்; சில்லரை வியாபாரிகள் 2 டன் எடையுள்ள வெங்காயத்தை கையிருப்பு வைக்கலாம் என அனுமதி
onion,jail,வெங்காயம்,சிறை

சென்னை : ''மத்திய அரசு நிர்ணயித்துள்ள எடையை விட கூடுதலாக வெங்காயம் பதுக்கினால் ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தமிழக உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சாந்தி எச்சரித்தார்.

அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு மொத்த வியாபாரிகள் 25 டன்; சில்லரை வியாபாரிகள் 2 டன் எடையுள்ள வெங்காயத்தை கையிருப்பு வைக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஆனால் சென்னை உட்பட பல இடங்களில் வெங்காயம் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதையடுத்து டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 33 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் உட்பட 40 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. வெங்காய சேமிப்பு கிடங்குகள் மற்றும் வெங்காய விற்பனை கடைகளில் சோதனை நடத்தி கையிருப்பில் உள்ள வெங்காயத்திற்கு சட்டப்படி ரசீது உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கிடங்குகளின் உரிமையாளர்கள் இடைத்தரகர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவை விட கூடுதலாக வெங்காயம் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட எடையை விட வெங்காயத்தை சேமித்து வைத்தாலோ பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்தாலோ அத்தியாவசிய பண்டக சட்டப்படி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.வெங்காயம் பதுக்கல் குறித்து பொது மக்கள் 98409 79669 என்ற பிரத்யேக அலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போர் பற்றிய ரகசியம் காக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாந்தி கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X