சோனியா பிறந்த நாள் விழாவில் பேனர் கிழிப்பால் பரபரப்பு

Added : டிச 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பாகூர்:தவளக்குப்பத்தில் காங்., தலைவி சோனியா பிறந்த நாள் விழாவில், வாலிபர் ஒருவர் பேனரை கிழித்ததால் பரபரப்பு நிலவியது.
மணவெளி தொகுதி காங்., சார்பில், தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், காங்., தலைவி சோனியா பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சோனியா, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், அரசு கொறடா அனந்தராமன் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர், பேனர் வைக்க தடை உள்ள நிலையில் இங்கு ஏன் பேனர் வைத்தீர்கள் எனக் கேட்டபடி, பின்புறமாக சென்று பேனரில், அனந்தராமன் புகைப்படம் இருந்த பகுதியை கத்தியால் கிழித்தார்.ஆத்திரமடைந்த காங்., கட்சியினர், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தவளக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, அந்த வாலிபர் என் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்போகிறீர்கள் என்றார். போலீசார் பதில் ஏதும் கூறாமல், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், அந்த நபர் தவளக்குப்பத்தை சேர்ந்த முருகவேல்,40; என்பதும், மனநிலை பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால், தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பரபரப்பு நிலவியது.யார் மீது வழக்குபேனர் வைக்க தடை சட்டம் உள்ள நிலையில், பேனர் வைத்தவர் மீது நடவடிக்கையா அல்லது பேனரை கிழித்தவர் மீது நடவடிக்கையா, என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201901:21:42 IST Report Abuse
தமிழ்வேல் பேனர் வைத்தது தவறுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X