'சாலைகள் சீரமைக்காவிட்டால் வாலிபர் சங்கம் எச்சரிக்கை

Added : டிச 11, 2019
Advertisement

புதுச்சேரி:சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்காவிட்டால் தினமும் போராட்டம் நடத்துவோம் என, ஜனநாயக வாலிபர் சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உழவர்கரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் மழை காரணமாக உழவர்கரை பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளது. கனரக வாகனங்கள் பெரிதும் பயன்படுத்தாத சாலைகளான உள்ளூர் சாலைகள் அனைத்தும் தரமற்றவைகளாக போடப்பட்டதே இத்தகைய சேதத்திற்கு முக்கிய காரணம். சாலை சீர்கேட்டால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
சாலைகளில் வீசும் துாசுகளும் வாகன ஓட்டிகளின் கண்களை மறைத்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் தரமான சாலைகள் அமைத்து சரியான முறையில் பராமரிக்க வேண்டும், உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீர் செய்திட வேண்டும். இவைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் தினமும் சாலைகளில் போராட்டத்தை நடத்துவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X