உன்னாவ் வழக்கில் 16ல் தீர்ப்பு

Updated : டிச 11, 2019 | Added : டிச 11, 2019 | கருத்துகள் (35)
Advertisement
Sengar,Kuldeep_Sengar,Delhi_court,verdict,Unnao,rape,case

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகருக்கு அருகே பெண்ணைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பா.ஜ., வில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்காருக்கு எதிரான வழக்கில், 16ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகருக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண், 2017ல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், அப்போது பா.ஜ.,வில் இருந்த, எம்.எல்.ஏ.,வான குல்தீப் சிங் சென்கார் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

லக்னோவில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில், அந்த பெண்ணின் தந்தை, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது, அவர் மர்ம மான முறையில் இறந்தார். இந்தாண்டு ஜூலை, 28ல் தனது உறவினர்களுடன், அந்தப் பெண் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு டிரக் மோதியது. அதில், அந்த பெண்ணின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். அந்தப் பெண் பலத்த காயமடைந்தார்.





இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது. மேலும், லக்னோவில் இருந்த வழக்கின் விசாரணை, டில்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை தினமும் விசாரித்து, 45 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இந்தாண்டு, ஆக., 5ல் விசாரணை துவங்கியது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. அதையடுத்து, தீர்ப்பை, 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-டிச-201919:51:15 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகத்துல அதிமுக இரண்டாம் முறை ஆட்சிப்பொறுப்பு. மத்தியில் பாஜக கூட்டணி இரண்டாம் முறை ஆட்சிப்பொறுப்பு. அம்மா இல்லாத நிலைமையில மூணாவது தடவையா வந்துரக் கூடாது. வந்தா சுடலையோட கட்சி காணாமப்போயிரும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201915:11:56 IST Report Abuse
தமிழ்வேல் பாரேன், இதுக்கும் முட்டு குடுப்பானுவோ.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
11-டிச-201911:59:46 IST Report Abuse
Tamilan இவனை தூக்கில போடுங்க ........மூஞ்ச பாத்தாலே அயோக்கியன் என்று தெரியுது .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X