மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்

Added : டிச 11, 2019
Advertisement
 மணல் கடத்திய  மினி வேன் பறிமுதல்

திருக்கனுார்:சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருக்கனுார் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது, கூனிச்சம்பட்டு ஐயனாரப்பன் கோவில் வழியாக வேகமாக வந்த டி.என். 32 சி 8959 பதிவெண் கொண்ட மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தததும், டிரைவர் வேனை நிறுத்திவிட்டு ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் மணலிப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார், 33; என்பதும், மணலிப்பட்டு ஆற்றில் இருந்து மணல் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மணல் கடத்திய மினி வேனை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X