சாலை விபத்தில் வாலிபர் படுகாயம்

Added : டிச 11, 2019
Advertisement

பாகூர்:பைக் மோதிய விபத்தில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரையாம்புத்துார், நேரு நகரை சேர்ந்தவர் வினோதமணி,38; இவர் சொந்தவேலையாக பாகூர் சென்று விட்டு பி.ஒய். 01 வி.பி. 2413 பதிவெண் கொண்ட பஜாஜ் பிளாட்டினா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சின்ன கரையாம்புத்துார் சந்திப்பு அருகே சென்ற போது, எதிரே வந்த பி.ஒய். 01 வி.ஏ. 5232 என்ற டி.வி.எஸ்., ஜூப்பிடர் பைக், வினோதமணியின் பைக் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த வினோதமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய கரையாம்புத்துாரை சேர்ந்த முரளி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X